For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்பாடு பொட்டலம்… சரக்கு பாட்டில்.. உ.பி கோயில் விழாவில் வினியோகித்த பாஜக தலைவர்

Google Oneindia Tamil News

ஹர்தாய்:உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் சார்பில் நடைபெற்ற கோயில் விழாவில், சாப்பாடு பொட்டலத்துடன் சாராய பாட்டிலும் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, நமது ஊர் பகுதிகளில் நடைபெறும் கோயில் நிகழ்ச்சிகள், திரு விழாக்கள் உள்ளிட்ட விசேஷங்களில் கூழ் ஊற்றுவது வழக்கம். அதையும் தாண்டி, ஆடு, கோழி பலியிடுவது போன்ற நேர்த்திக்கடன்களும் நடக்கும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் கோயில் விசேஷங்களுக்கு என்று தனி மவுசு உண்டு. திருவிழா, குடமுழுக்கு விழா, பஜனைகள் என ஆன்மீகம் கமழும் பல அம்சங்களும் நடைபெறும். அதன் பின்னர் கணக்கு வழக்குகள் என சச்சரவுகள் நடப்பது தனிக்கதை.

கோயில் திருவிழா

கோயில் திருவிழா

ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோயில் விழாவில் சாப்பாட்டு பொட்டலத்துடன், வருபவர்களுக்கு தனியாக சாராய பாட்டிலும் வினியோகம் செய்யப்பட்டது, இணையத்தில் வைரலாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஷ்ரவன் தேவி கோயிலில் பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் சார்பில் பாசி என்ற சமூகத்தினரின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சாப்பாட்டுடன் சாராய பாட்டில்

சாப்பாட்டுடன் சாராய பாட்டில்

அதில், விவசாயிகள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, அவர்களுக்கு சாப்பாடு பொட்டலத்துடன் கூடிய சரக்கு பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பொட்டலத்தை திறந்து பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளுடன் அவர்களது சிறு வயது மகன்களுக்கும் இந்த உணவு பொட்டலுத்துடன் கூடிய சரக்கு பாட்டிலும் கொடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனத்துக்கு உரியது

இதையடுத்து பாஜகச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அன்சுல் வர்மா கூறுகையில், நரேஷ் அகர்வால் நடத்திய கோயில் நிகழ்ச்சியில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது கண்டனத்திற்குரியது.இது தொடர்பாக, முதல்வர் யோகி ஆதித்ய நாத்திடம் புகார் தெரிவித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.

விசாரணை நடத்தும் போலீசார்

இது தொடர்பான விடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, காவல்துறைக்கு புகார்களும் பறந்தன. இது குறித்து கூறியுள்ள போலீசார் புகார்கள் குறித்தும், விடியோக்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். முழு விசாரணைக்கு பிறகே இதுகுறித்து கூறமுடியும் என்றனர்.

English summary
liquor bottles, kept inside food packets, were distributed at an event organised by bjp leader naresh agarwal's son nitin at a temple, hadoi district, uttarpradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X