விவசாயக் கடன் தள்ளுபடி என்பது ஃபேஷனாகிவிட்டதாம்.. அத யோகாவ ஃபேஷனாக்குனவங்க சொல்றாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி என்பது தற்போது ஃபேஷனாவிட்டதாக வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்வதாக கர்நாடக அரசு நேற்று அறிவித்தது.

மத்தியப்பிரதேசத்தில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயகள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து விவசாய கடன் தள்ளுபடி செய்வதால் ஏற்படும் நிதிச்சுமையை மாநில அரசுகள் தான் ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

ஃபேஷனாகிவிட்டது

ஃபேஷனாகிவிட்டது

வறட்சியால் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்த தமிழகத்தில் இதுவரை விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை . இந்நிலையில் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வது என்பது தற்போது ஃபேஷனாகிவிட்டது என மத்திய அமைச்சரி வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

தவிர்க்கப்பட வேண்டும்

தவிர்க்கப்பட வேண்டும்

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், முடியாத சூழ்நிலையில் தான் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இறுதித்தீர்வு அல்ல

இறுதித்தீர்வு அல்ல

இது இறுதித் தீர்வு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். நீங்கள் இந்திய அரசியல் அமைப்பை கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள் கொந்தளிப்பு

விவசாயிகள் கொந்தளிப்பு

விவசாயிகள் கஷ்டப்படும் போதுதான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வெங்கய்யா நாயுடுவின் இந்த பேச்சு விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union urban development minister M Venkaiah Naidu said on Thursday loan waiver has become fashion now and should be waived in extreme situations only.
Please Wait while comments are loading...