என்னாது... தாமரை தேசிய மலரே இல்லையா?.... ஆர்டிஐ கூறுவது என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: தாமரை மலர் தேசிய மலர் இல்லை என்றும் இந்தியாவுக்கென தேசிய மலர் என்ற ஒன்று கிடையாது என்றும் தகவலறியும் சட்டம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேசிய மலராக தாமரை அறிலிக்கப்பட்டதா என்று லக்னோவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரும், 11-ஆம் வகுப்பு மாணவியுமான ஐஸ்வர்யா பராஸார் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.

Lotus is not India's national flower, RTI says

அந்த மனு சுற்றுச்சூழல் மற்றுபம் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அந்த மையத்தின் இளநிலை நிர்வாக அதிகாரி தபாஷ் குமார் கோஷ் பதிலளிக்கையில், தாவரவியல் ஆய்வு மையமானது எந்த மலரையும் இந்தியாவுக்கான தேசிய மலராக அறிவிக்கவில்லை என்றார் அவர்.

இதுகுறித்து அந்த மாணவி ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது சிறு வயதிலிருந்தே மற்றவர்கள் படித்தது போல் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்று படித்தேன். அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவதற்காக ஆர்டிஐயில் மனு தாக்கல் செய்தேன்.

மத்திய அரசானது தாமரை மலரை தேசிய மலராக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த குழப்பத்தை தெளிவுப்படுத்த அதன் இணையதளத்தில் சரியான தகவலை பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அந்த மாணவி இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவும் திட்டமிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A response to a query under the Right to Information Act (RTI) by the Botanical Survey of India (BSI) has revealed that Lotus is not the national flower of the country.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற