For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம் ஆத்மியில் "ஏர் டெக்கான்" கேப்டன் கோபிநாத் இணைந்தார்!

By Mathi
Google Oneindia Tamil News

Captain Gopinath joins Aam Aadmi Party
பெங்களூர்: அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் "ஏர் டெக்கான்" விமான சேவையின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தும் இணைந்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அக்கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. 'இன்போசிஸ்' பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் ஐக்கியமாகும் கட்சியாக ஆம் ஆத்மி உருமாறி வருகிறது.

இந்நிலையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வந்த ஏர் டெக்கானின் நிறுவனரான கேப்டன் கோபிநாத்தும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார்.

அவர் கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் சுயேட்சையாக, பாஜகவின் அனந்தகுமாரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

தாம் ஆத்மியில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள கோபிநாத், நான் எப்போதும் அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடுகிறவன். ஊழல்தான் இந்தியாவின் பிரச்சனை. எனக்கு ஆம் ஆத்மி தலைவர்களை நீண்டகாலமாகவே தெரியும். நான் லோக்சபா தேர்தலில் போட்டியிட தயார்தான். ஆனால் உரிய நேரத்தில் முடிவு அறிவிப்போம் என்றார்.

English summary
Low-cost aviation pioneer GR Gopinath, better known as Captain Gopinath who started Air Deccan, has joined new political force Aam Aadmi party (AAP)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X