கடல் வழி விமானம்.. நமக்குத்தான் "செய்தி".. 2002லேயே பயன்படுத்திய விடுதலைப் புலிகள்!
கடல்வழி விமானம் என்பது இந்தியர்களுக்கு இன்றுதான் புதிய செய்தி.. ஆனால் 2002-ம் ஆண்டே விடுதலைப் புலிகள் கடல்வழி விமானத்தை பயன்படுத்தினர் என்பது வரலாறு.
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு நீர்வழி விமானத்தை பயன்படுத்துகிறார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ 2002-ம் ஆண்டே கடல்வழி விமானத்தை பயன்படுத்திவிட்டனர் என்பது வரலாறு.
குஜராத்தில் சபர்மதி ஆற்றில் நீர்வழி விமானம் இயக்கபடுகிறது. இந்த விமானம் மூலமாக தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
இந்தியாவுக்கு கடல்வழி அல்லது நீர்வழி விமான சேவை புதியதாக இருக்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2002-ம் ஆண்டிலேயே இதனை பயன்படுத்தினார்.

பிரபாகரன் பிரஸ் மீட்
2002-ம் ஆண்டு இலங்கை அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தனர். இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சர்வதேச செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அனுமதி மறுப்பு
இந்த் பிரஸ் மீட்டில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தமிழீழத்துக்கு வருகை தர இருந்தார். ஆனால் இதற்கு உரிய அனுமதிகள் கிடைக்கவில்லை.

கடல்வழி விமானம்
இதையடுத்து நார்வேயின் உதவியுடன் மாலத்தீவுக்கு பாலசிங்கம் வருகை தந்தார். அங்கிருந்து கடல்வழி விமானம் மூலமாக வன்னியின் இரணைமடுகுளத்துக்கு பாலசிங்கமும் அவரது மனைவி அடேல் அம்மையாரும் வருகை தந்தனர்.

தளபதிகளுடன் பிரபாகரன்
இரணைமடுகுளத்துக்கு நேரில் சென்று பாலசிங்கத்தை தளபதிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வரவேற்றார் எனது வரலாறு. அவருடன் மனைவி மதிவதினி, அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் ஜவான் உள்ளிட்டோர் பாலசிங்கத்தை வரவேற்றனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications