For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரத்தடியில்.. அதுவும் சமாதிகளுக்கு நடுவில்.. "மன்சூர்" செய்றதை பாருங்க.. ஸ்பெஷல் ஐட்டம்தான் ஹைலைட்டே

சமாதிகளுக்கு நடுவே டீக்கடை வைத்து நடத்துகிறார் ஒரு இஸ்லாமிய நபர்

Google Oneindia Tamil News

காந்திநகர்: முஸ்லிம் நபர் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார்.. இந்த டீக்கடைதான் இணையத்தில் வைரலாகி, அனைவருக்கு ஆச்சரியத்தை தந்து வருகிறது.

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள், செய்திகள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சில நேரத்தில், அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்.. அந்த வகையில் டீக்கடைகளை சொல்லலாம்.

ஸ்பெஷாலிட்டி

ஸ்பெஷாலிட்டி

சாதாரண டீக்கடைதானே, என்று ஒதுங்கியும் கடந்தும் பொதுமக்கள் சென்றுவந்த நிலையில், சமீபகாலமாகவே சில டீக்கடைகளும் மக்களை கவர்ந்து வருகின்றன.. சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நீலோஃபர் என்ற டீக்கடையில், ஒரு டீ 1000 ரூபாய்க்கு விற்றார்கள்.. 1000 ரூபாய் சொல்லும் அளவுக்கு அந்த டீயில் என்னதான் இருக்கிறது என்று சிலர் வாங்கி குடித்தனர்.. அசாமில் 'கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ என்ற டீ தூள், ஒருகிலோ ரூ.75 ஆயிரமாம்.. அந்த டீ தூள் அரிதானது.. ரொம்ப காஸ்ட்லி.. அதனால்தான் ஒரு கப் டீயை 1000 ரூபாய்க்கு விற்றார்கள்.. இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

 ஆஃபர் ப்ரீ

ஆஃபர் ப்ரீ

அதேபோல, 2 நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் ஒரு இளைஞர் டீக்கடை திறந்துள்ளார்.. இவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்தாராம்.. ஆனால், இவரை அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்பதால், காதலை ஏற்கவில்லை.. இருந்தாலும் காதலியின் நினைவாக ஒரு டீக்கடையை திறந்து, காதலியின் முதல் எழுத்தையே அந்த டீக்கடைக்கு பெயர் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்த டீக்கடைக்கு ஜோடியாக வந்து டீ குடித்தால் 10 ரூபாயாம்.. ஆனால், காதல் தோல்வி அடைந்தவர்கள் இங்கு வந்து டீ குடித்தால், அவர்களுக்கு ஃப்ரீ என ஆஃபர் தந்துள்ளார்.

 பாய் கடை

பாய் கடை

இதோ குஜராத்தில் இன்னொரு டீக்கடை மக்களை அசரடித்து வருகிறது.. ஆமதாபாத்தில் ஜமால்பூர் காதியாவில் ஒரு டீக்கடை திறக்கப்பட்டுள்ளது.. இதற்கு லக்கி டீக்கடை என்று பெயர்.. இந்த டீக்கடை ஓனர் ஒரு முஸ்லிம்.. அப்துல் ராஜக் மன்சூரி என்பவர்தான் இந்த கடையை நடத்தி வருகிறார்.. கடையை கொண்டு போய் சமாதிகளுக்கு நடுவே திறந்துவைத்துள்ளார்.. இதுதான், இந்த டீக்கடையின் ஸ்பெஷாலிட்டி.. பல்வேறு மதத்தினரும் அவருடைய கடை டீக்கு ரசிகர்களாக மாறினர்....

மரத்தடியில்

மரத்தடியில்

முஸ்லிம்களின் சமாதிகள் இருந்த இந்த இடத்தில், வேப்ப மரம் ஒன்று இருந்துள்ளது.. இந்த மரத்தடி நிழலில், தள்ளுவண்டியில்தான் முதன்முதலில் மன்சூரி டீக்கடையை வைத்துள்ளார்.. ஆனால், கொஞ்ச நாளிலேயே இந்த கடை ஃபேமஸ் ஆகிவிட்டதால், ஆதரவுகள் பெருகிவிட்டது.. அதனால், மயானத்திலேயே கடையை விரிவுபடுத்திவிட்டார் மன்சூரி... நிறைய மரங்கள் அங்கு காணப்படுகின்றன.. அந்த மரங்களுக்கு நடுவே.. அதிலும் சமாதிகளுக்கு நடுவே, இந்த டீக்கடை ஜம்மென்று காட்சி தருகிறது.. அதற்கு ஒரு இரும்பு கேட் பொருத்தியுள்ளார்.. தனித்தனியாக டேபிள் சேர்களையும் போட்டு வைத்துள்ளார்.. இந்த டீக்கடைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம்..

 மயானம் + கஸ்டமர்கள்

மயானம் + கஸ்டமர்கள்

இந்த டீக்கடையில் யார் வேண்டுமானாலும் வந்து டீ குடித்துவிட்டு போகலாம்.. மதம் கிடையாது.. சாதி கிடையாது.. எல்லா மதத்தினரும் இங்கு வருவார்கள்.. எல்லாருக்குமே தனித்தனி அக்கவுண்ட் உண்டு.. இந்த கடைக்கென, ரெகுலர் கஸ்டமர்களும் இருக்கிறார்கள்.. டீ தவிர, வடை, போண்டா, பஜ்ஜி என ஸ்நாக்ஸ் ஐட்டங்களும் இங்கு கிடைக்கும்.. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், மன்சூரி பாய் டீக்கடை நடத்தினாலும், முழுக்க முழுக்க டீக்கடைக்குள் சைவம் சாப்பாடுதானாம்.. சமாதிக்கு நடுவே இயங்கும் இந்த டீக்கடைதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

 பீச்சில் சுடுகாடு

பீச்சில் சுடுகாடு

இதற்கு நம் தமிழக மக்கள் பல கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. சுடுகாடு ஆக்கிரமிப்பை இப்படியா டீசன்ட்டா சொல்வது? என்று கேட்டுள்ளனர்.. ஒருசிலரோ, "இதென்னே பிரமாதம், எங்க ஊர்ல சமாதிக்கு நடுவேதான், பீச் இருக்கு என்கிறார்கள்.. மேலும் சிலரோ, ஐயோ ஐயோ... சமாதி கிடையாது, எங்க ஊர்ல சுடுகாட்டுக்கு நடுவிலேதான் கடலே இருக்கு" என்று கிண்டலடித்து கொண்டிருக்கிறார்கள்..

English summary
Lucky Tea stall built on Muslim graveyard shows the way, whats happening in Ahmedabad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X