சாக்லேட் திருட்டு: போலீசுக்கு போன 3 வயது சிறுவன்.. அமைச்சர் வழங்கிய தீபாவளி கிப்ட்! என்ன தெரியுமா?
போபால்: மத்திய பிரதேசத்தில் சாக்லேட் உள்பட மிட்டாய்களை பிடுங்கி ஒளித்து வைத்து தாக்கியதாக கூறி தாய் மீது போலீசில் 3 வயது சிறுவன் புகார் அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவிய நிலையில் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சிறுவனுக்கு தீபாவளிக்கு பரிசு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரில் வசித்து வரும் தம்பதியின் மகன் ஹம்சா. இவனுக்கு வெறும் 3 வயது தான் ஆகிறது. சாக்லேட் உள்ளிட்ட மிட்டாய்களை அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவன் தான் இந்த ஹம்சா.
இதனை ஹம்சாவின் தாய் கண்டித்துள்ளார். மேலும் சாக்லேட்டுகளை அதிகமாக கொடுப்பதை சமீபகாலமாக தவிர்த்து வந்துள்ளார்.

சாக்லேட்டுகள் வழங்க மறுத்த தாய்
இந்நிலையில் சிறுவன் தனது தாயிடம் சாக்லேட் உள்ளிட்ட மிட்டாய்களை கேட்டார். ஆனால் தாய் கொடுக்கவில்லை. அதோடு மிட்டாய்களை ஒளித்து வைத்ததோடு, சாக்லேட் எதுவும் இல்லை எனக்கூறி அவர் ஹம்சாவின் கன்னத்தில் செல்லமாக தட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த ஹம்சா தன் தந்தையிடம் சென்று அம்மா சாக்லேட்களை திருடி விட்டார். அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என கூறினான்.

போலீசில் புகார் அளித்த குழந்தை
இதை கேட்டு வியந்து போன சிறுவனின் தந்தை சிரித்தார். மேலும் தாய் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்ததால் வேறு வழியின்றி அவனை அழைத்து கொண்டு போலீஸ் நிலையத்துக்கு தந்தை சென்றார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ்ஐ பிரியங்கா நாயக்கிடம் 3 வயது பாலகன் ஹம்சா தன் தாய் மீது புகார் கொடுத்தார். போலீசில் சிறுவன் புகார் கூறிய வீடியோ இணையதளங்களில் வெளியானது. சிறுவன் கூற கூற எஸ்ஐ பிரியங்கா நாயக் எழுதும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

அமைச்சர் வீடியோ காலில் பேச்சு
இந்த வீடியோவை மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பார்த்தார். மேலும் அவர் சிறுவனிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது சிறுவனுக்கு தீபாவளி பரிசு வழங்குவதாக அறிவித்தார். அதன்படி சிறுவனுக்கு சொந்த செலவில் சைக்கிள் வாங்கிய அமைச்சர், ஏராளமான சாக்லேட்டுகளை அனுப்பினார்.

சைக்கிள் பரிசாக வழங்கிய அமைச்சர்
அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவின் சைக்கிள் மற்றும் சாக்லேட்டுகளை போலீசார் சிறுவனின் வீட்டுக்கு சென்று வழங்கினார். சைக்கிள், சாக்லேட்டை பார்த்த சிறுவன் மகிழ்ச்சியில் திளைத்தான். மேலும் சைக்கிள் ஓட்டுவது தொடர்பாக சிறுவனுக்கு போலீசார் பயிற்சி அளித்தனர். அதோடு சிறுவன் சைக்கிள் ஓட்டும் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர் மற்றும் போலீசாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications