For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இருமாநில தேர்தல் முடிவுகள் எதை காட்டுகிறது.. ராகுல் சாதிக்காததை சோனியா சாதித்தாரா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra, Haryana Election Results 2019 LIVE : இருமாநில தேர்தல் முடிவுகள் எதை காட்டுகிறது?

    டெல்லி: ராகுல் சூறாவளி பிரச்சாரம் செய்தும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் சாதிக்க முடியவில்லை. சோனியா காந்தி இப்போது தலைவர். பிரச்சாரத்திற்கே போகவில்லை. ஆனால் மகாராஷ்டிரா சிறப்பாகவும், ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காத அளவுக்கும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.

    ராகுல் காந்தி தலைமையை விட சோனியா தலைமை வலுவானது என்பதை இது காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் முன்னதாக சோனியா காந்திக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்ற ராகுல் காந்தியால் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

    அவர் லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் சென்று பல முறை பிரச்சாரம் செய்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியால் கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைத் தவிர எங்குமே பெரிய வெற்றி பெற முடியவில்லை. இதனால் 2019ம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

    78 வயதிலும் இந்த குதிரை ஓடும்.. பாஜகவை அசைத்து பார்த்த சரத் பவார்.. தேசியவாத காங்கிரசின் எழுச்சி!78 வயதிலும் இந்த குதிரை ஓடும்.. பாஜகவை அசைத்து பார்த்த சரத் பவார்.. தேசியவாத காங்கிரசின் எழுச்சி!

     தேர்தலை சந்தித்த காங்

    தேர்தலை சந்தித்த காங்

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அதன் பிறகு இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். அவரது தலைமையில் மீண்டும் காங்கிரஸ் கட்சி இந்த முறை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்தது.

    பிரச்சாரம் செய்யவில்லை

    பிரச்சாரம் செய்யவில்லை

    கடந்த முறையைப் போல இந்த முறை பெரிய அளவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவில்லை ஹரியானா மற்றும் மகாராஷ்ராவில் மட்டும் ராகுல் அதிக கவனம் செலுத்தினார். ஆனால் சோனியா காந்தி பிரச்சாரத்திலே ஈடுபடவில்லை. ஆனாலும் மகாராஷ்டிராவில் பெரிய அளவிலும் ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காத அளவுக்கும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.

    காங்கிரஸ் பலம்

    காங்கிரஸ் பலம்

    கடந்த முறையை விட இந்த முறை காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் பெரிய அளவில் பாஜகவுக்கு கடும் போட்டி கொடுத்துள்ளது. அங்கு 93 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் வகிக்கிறது. பாஜக கூட்டணி 166 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் பாஜக 41 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 11 இடங்களில் வென்றுள்ளது.

    காங். உற்சாகம்

    காங். உற்சாகம்

    எனவே தற்போதைய தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தி தலைமையை விட சோனியா தலைமை வலுவானது என்பதை இது காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. வீழ்ந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தியே சிறந்த தலைமை என்பதும் அவரால் காங்கிரஸ் கட்சியை பழைய நிலைக்கு கொண்டுவர வைக்க முடியும் என்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இடைக்கால தலைவராக உள்ள சோனியா உடல் நிலை தேறி, முழுபொறுப்பை ஏற்று பழையபடி வந்தால் நிச்சயம் அந்த மாற்றம் வரலாம்.

    English summary
    Maharashtra, Haryana Election Results 2019 LIVE: what sonia gandhi achieved as congress leader in two state assembly election comapre then ragul gandhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X