For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானா மாநில 'கன்னி' சட்டசபை கூட்டம் தொடங்கியது

By Veera Kumar
Google Oneindia Tamil News

Maiden session of Telangana Assembly begins
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்துக்கு நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் முதல்வராக பதவியேற்றார்.

தெலுங்கானா சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. முன்னதாக இன்று காலை மூத்த உறுப்பினர் ஜனாரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் சபாநாயகராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல மேலவை தலைவராக நீத்தி வித்யாசாகர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். 119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்திக்கு 63 உறுப்பினர் பலம் உள்ளது. காங்கிரஸ் 21, தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி 20 இடங்களை வென்றது.

சட்டசடபை கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் 11ம்தேதி உரையாற்றுகிறார். 12 மற்றும் 13ம்தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும். அன்றுடன் தேதி குறிப்பிடப்படாமல் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படும்.

English summary
The maiden session of Telangana Assembly and council began here today with the Protem Speaker administering the oath to new members. Earlier in morning senior-most member of the Assembly K Jana Reddy was sworn in as the Protem Speaker by Governor ESL Narasimhan at Raj Bhavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X