இசட் பிளஸ் பாதுகாப்பில் பணப்பெட்டிகளை கடத்துகிறார்கள்... பாஜக தலைவர்கள் மீது மம்தா புகார்
கொல்கத்தா: 'இசட்' பிளஸ் பாதுகாப்பில் பணப்பெட்டிகளை பாரதிய ஜனதா தலைவர்கள் கடத்துகிறார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் வேட்பாளர் ரேசில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பெயரும் பேசப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால், தேசிய அளவிலான அரசியலில், மோடிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.
மேற்கு வங்காள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரச்சாரம் என்று சொல்லும் அளவிற்கு பிரதமர் மோடி, அதிரடியாக களமிறங்கி உள்ளார். இந்தநிலையில், பர்கானாஸ் மாவட்டம் அசோக் நகரில் மம்தா பானர்ஜி, பிரச்சாரம் மேற்கொண்டார்.
உயிருக்கு போராடிய சிறுமி.. சொந்த காசில், டெல்லிக்கு தனியார் ஜெட்டில் அனுப்பி வைத்த பிரியங்கா காந்தி

அள்ளி வீசுகின்றனர்
அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களுக்கு பாஜக-வினர் ஏராளமான பணத்தை அள்ளி வீசுகின்றனர். சமீபத்தில் பாஜக வேட்பாளர் பாரதிகோசின் காரில் இருந்து ரூ. 1,13,895 பணத்தை கைப்பற்றி உள்ளனர்.

கட்டு கட்டாக பணம்
அதே நேரம், பாஜக மூத்த தலைவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்படும் இசட்பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்தி பணப்பெட்டிகளை கடத்தி செல்கிறார்கள். தங்களது வாகனத்திலேயே கட்டு கட்டாக பணத்தை அடுக்கி பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. பாஜகவினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.

படம் எடுக்க அனுமதியில்லை
பிரதமர் மோடியும், பாரதிய ஜனதா தலைவர்களும் பிரச்சாரத்துக்கு வரும் போது அவர்களது ஹெலிகாப்டர்களையோ, கார்களையோ பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த கார்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை கடத்துவதே இதற்கு காரணம் ஆகும் என்றும் கூறினார்.

அது நடக்காது
மேலும், எத்தனை பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதோ? யாருக்கு தெரியும். பணத்தால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பாஜக தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், விழித்திருந்து பிடிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!