எல்லா முடிவையும் மோடி எடுத்துட்டு.. ஹர்ஷ் வர்த்தன் மீது பழி போட்டுட்டாங்க.. மம்தா பானர்ஜி விளாசல்
கொல்கத்தா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்துள்ளார்.
பாவம் ஓரிடம் பழி ஒரு இடமா என்று வகையில் கேள்வியெழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று பெரிய அளவில் விஸ்தரிப்பு செய்யப்படுகிறது. 12 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 43 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.

மமதா கருத்து
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோ மற்றும் தெபஸ்ரி சவுத்ரி ஆகிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதே நேரம் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 4 எம்பிக்கள் இணை அமைச்சர்கள் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் திரினாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி.

மோடி தலைமையில் கூட்டங்கள்
மம்தா பானர்ஜி கூறுகையில், ஆட்சி நிர்வாகம் நடத்துவதில் மத்திய அரசு சீரியஸாக இருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது. சுகாதாரத் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஆனால் இப்போது ஹர்ஷவர்த்தன் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். அவர் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார். மத்திய அரசு மட்டும் சீரியஸாக வேலை பார்த்து இருந்தால் கொரோனா இரண்டாவது அலை வந்திருக்காது.

அடுக்கடுக்காக கேள்விகள்
பாபுல் மற்றும் தெபஸ்ரி சவுத்ரி ஆகியோர் திடீரென தவறு செய்துவிட்டதாக பாஜக மேலிடம் நினைக்கிறதா. இதனால்தான் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்களா, இவ்வாறு அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பி இருக்கிறார் மம்தா பானர்ஜி.

வரிசையான குற்றச்சாட்டுகள்
கொரோனா இரண்டாவது அலை பரவிய காலகட்டத்தில் போதிய முன்னெச்சரிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை. நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளில் மத்திய அரசு சிக்கியது. தற்போது தடுப்பூசிகள் உரிய அளவுக்கு பங்கீடு செய்து தரப்படவில்லை, தட்டுப்பாடு நிலவுகிறது என்ற குற்றச்சாட்டுக்கும் சுகாதாரத்துறை உள்ளாகியிருக்கிறது. எப்போதுமே ஊரடங்கு உத்தரவு மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த மிகப்பெரிய பிரச்சினைகளின் போது தொலைக்காட்சிகளில் தோன்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுவது வழக்கம். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதவி பறிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு, கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications