For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர்.. மக்களே முக்கியம்... தீயாய் பரவும் கொரோனா... கொல்கத்தா பிரசாத்தை ரத்து செய்த மம்தா பானர்ஜி

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கொல்கத்தா தேர்தல் ரத்து செய்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரியன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் தீவிரவத்தை உணர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கொள்ள இருந்த அனைத்து விதமான தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளையும ரத்து செய்தார்.

Mamata Banerjee will not campaign in Kolkata anymore says TMC

கொரோனா பரவும் சூழ்நிலையில் தேர்தல் பிரசாரங்களை நடத்துவது குறித்து சிந்திக்கும்படி மற்ற தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கொல்கத்தா பிரசாரத்தை பாதியில் ரத்து செய்துள்ளார்.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரியன் தனது ட்விட்டர் பக்கத்தில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நடந்து கொண்டு இருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜி இனி கொல்கத்தாவில் எந்தவிதமான தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

Mamata Banerjee will not campaign in Kolkata anymore says TMC

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான 26ம் தேதியன்று அடையாளமாக கூட்டம் நடத்துவார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தனது தேர்தல் பேரணிக்கான நேரத்தை குறைத்துக்கொண்டுள்ளார். மமதா பானர்ஜி தற்போது பேரணிக்கான நேரத்தை 30 நிமிடங்களாக குறைத்துள்ளதாகவும் டெரிக் ஓ பிரியன் பதிவிட்டுள்ளார்.

English summary
TMC leader Derek O Brien tweeted that West Bengal Chief Minister Mamata Banerjee will not campaign in Kolkata anymore for the assembly election. Only one ‘symbolic’ meeting on the last day of campaigning in the city on April 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X