இப்படியா பெட் கட்டுவாங்க? 5 புல்லை ராவா அடித்த இளைஞர்! கடைசியில் இப்படி ஒரு சோகம்..நடுதெருவில் மனைவி
பெங்களூர்: இப்படி எல்லாம் பந்தயம் கட்டுவாங்களா என்பது போல கர்நாடகாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. தண்ணீரே கலக்காமல் ஐந்து லிட்டர் மதுவை குடிப்பேன் என நண்பர்களிடம் பந்தயம் கட்டிய நண்பர் பரிதாபமாக உயரிழந்திருக்கிறார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை பெற்றெடுத்த ஒரே வாரத்தில் கணவர் உயிரிழக்க மனைவி இப்போடு நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இளைஞர்களிடையே பந்தயம் கட்டுவது என்பது வழக்கம் தான். தற்போது சமூக வலைதளங்களில் கூட சேலஞ்சிங் வீடியோக்களை பலர் வெளியிட்டு வருகிறார்கள். அதாவது கமெண்ட் செக்ஷனில் ஏதாவது ஒரு செயலை செய்ய சொன்னால் அதை செய்து வீடியோ போடுவது வழக்கமாகி வருகிறது.
சில நேரங்களில் இதுவே விபரீதத்தில் போய் முடியும். அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்திருக்கிறது. கோலார் மாவட்டம் முன்பகல் அருகே பூஜாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதான கார்த்திக்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து அவரது மனைவி கர்ப்பமான நிலையில் கடந்த வாரம் தான் அந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்திருக்கிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடரெட்டி, சுப்பிரமணி ஆகிய ஐந்து நபர்களுடன் நேற்று முன்தினம் கார்த்திக் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கிடையே விளையாட்டாய் பேசிய ஒரு விஷயம் தான் விபரீதம் ஆகி இருக்கிறது.
அதாவது ஒரு லிட்டர் கொண்ட மது பாட்டில் ஐந்தை தண்ணீரே கலக்காமல் தன்னால் குடிக்க முடியும், அதாவது மொத்தம் ஐந்து லிட்டர் மதுபானத்தை தண்ணீரே கலக்காமல் குடிப்பேன் எனக் கூறி பந்தயம் கட்டி இருக்கிறார். அது முடியவே முடியாது என அவரது நண்பர்கள் கூற இறுதியாக கார்த்திக் ஐந்து லிட்டர் மதுபானத்தை குடித்துவிட்டால் பத்தாயிரம் ரூபாய் தருவதாக கூறியிருக்கின்றனர்.
ஏற்கனவே போதையில் இருந்த கார்த்திக் 10 ஆயிரம் பணத்தை எப்படியாவது வாங்கி விடுவோம் என நினைத்து மது பாட்டில்களை தண்ணீர் கலக்காமல் குடித்திருக்கிறார். இரண்டாவது பாட்டிலை குடிக்கும்போதே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த நிலையில் தன்னால் குடிக்க முடியவில்லை எனவே மருத்துவமனைக்கு அழைத்துப் போங்க என நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து பதறிப் போன அவரது நண்பர்கள் கோலார் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கக் கூட முடியவில்லை காரணம் ஏற்கனவே உடல் முழுவதும் அதிக அளவில் மதுபானம் கலந்திருந்ததால் முதலுதவி சிகிச்சை கூட அவருக்கு பலன் அளிக்கவில்லை. அதனால் சிறிது நேரத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். மகன் பிறந்து ஒரு வாரத்திலேயே கணவன் உயிரிழந்ததால் அவரது மனைவியும் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்த ஒரே ஆண்டில் கணவர் இறந்து விட ஒரு வார கைக் குழந்தையுடன் தற்போது நடுத்தெருவில் இருக்கிறார் கார்த்திக்கின் மனைவி.
-
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications