மாப்பிள்ளைக்கு அம்புட்டு ஆசை.. மாமியார் வீட்டிலிருந்த மனைவியை பார்க்க அரசு பஸ்சை எடுத்து சென்ற கணவன்
அமராவதி: மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியை பார்ப்பதற்கு செல்ல வந்த பயணி ஒருவர், பேருந்து எதுவும் இல்லாததால், அரசு பேருந்தை தானே எடுத்து சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை காணாததால், பஸ் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடு வழியில் பஸ்சை மடக்கி, அந்த பயணியை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள ஆத்மகூறு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அரசு பெருந்து திடீரென மாயமானது. நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து காலையில் வந்து பார்த்த போது காணாமல் போனதைக் கண்டு பதறிப்போன பேருந்து ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அங்குள்ள காவல் நிலையத்தில் பேருந்து ஊழியர்கள் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் பேருந்தை கடத்தியது யார் என்று தேடினர்.
நடுவழியில் பயணியை இறக்கிவிட்ட ஆம்னி பஸ்.. மறக்க முடியாத உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்
அப்போது, ஆள் இல்லாமல் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டு இருப்பதாக பேருந்து ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையும் காவல்துறையிடம் பகிர்ந்த போக்குவரத்து ஊழியர்கள், உடனடியாக பேருந்தை மீட்டு தருமாறு வலியுறுத்தினர். இந்த தகவலை வைத்து போலீசார் பேருந்தை மீட்டனர். பேருந்தை ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த நபர் அளித்த வாக்கு மூலம் போலீசாரை ஒரு நிமிடம் திகப்படைய வைத்துள்ளது. அதாவது, எனது மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். மாமியார் வீட்டு உள்ள மூச்சுர் என்ற கிராமத்திற்கு செல்ல நான் பேருந்து நிலையம் வந்த போது பேருந்து எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனால், பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு பஸ்சை எடுத்து செல்லலாம் என நினைத்தேன்.
இன்டெர்நெட்டே தேவையில்லை.. வாட்ஸ் அப்பில் வீடியோ, போட்டோக்களை அனுப்பலாம்.. வரப்போகும் அசத்தல் வசதி
கனரக லாரி ஓட்டுநரான நான், பேருந்தில் ஏறி ஸ்டார்ட் செய்தேன். அப்போது பேருந்தும் இயங்கியது. இதனால், பேருந்தை எடுத்து சென்று விட்டேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் கூறும் தகவல்கள் உண்மைதானா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியார் வீட்டிற்கு சென்ற மனைவியை பார்ப்பதற்காக அரசு பஸ்சை பயணி ஒருவர் எடுத்து சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications