நியாயம் நியாயம்தான்டா.. பாஜகவிற்கு ஆதரவு அளித்த வேட்பாளரை "கடைசி நாளில்" கழற்றி விட்ட காங்கிரஸ்!
இம்பால்: மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நேற்று நள்ளிரவு காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் சட்டசபைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்ப்பூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் முதல் கட்டமாக 38 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
முதற்கட்ட தேர்தலில் 173 வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள் . இதில் 15 பேர் பெண் வேட்பாளர்கள். மொத்தம் 20 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

மணிப்பூர்
மணிப்பூரில் 2002 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் ஆட்சிசெய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஓக்ராம் இபோபி சிங் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியை வலுவான கட்சியாக மாற்றினார். காங்கிரஸ் கட்சி மணிபூரில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது. 2017 தேர்தலிலும் காங்கிரஸ் தேவையான இடங்களைப் பெற்றிருந்தது. ஆனாலும் மாநில கட்சிகளைக் கைகோர்த்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது பாஜக தனியாக தேர்தலை சந்திக்கிறது.

காங்கிரஸ்
மணிப்பூரில் காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைக்காததால், இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. மணிப்பூரில் நடந்து வரும் மும்முனைப் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும், அதிக தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதிக தொகுதிகளைப் பெறாவிட்டால், கடந்த தேர்தலில் நடந்ததுபோல் இந்த முறையும் ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

வேட்பாளர்
இந்நிலையில், மணிப்பூரில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் மணிப்பூர் காங்கிரஸ் தங்கள் வேட்பாளரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. மணிப்பூர் மாநிலம் வாங்கோய் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சலாம் ஜாய் சிங். இவர் இதே தொகுதியின் பாஜக வேட்பாளரான ஓனாம் லுகோய் சிங்குக்கு ஆதரவளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான ஆதாரமாக வீடியோ ஒன்றும் வெளியானது.

அதிரடி நீக்கம்
இந்நிலையில், மணிப்பூர் காங்கிரஸ் கட்சி, ஒழுங்கு நடவடிக்கையின் கீழ், இன்று தேர்தல் என்ற நிலையிலும் சலாம் ஜாய் சிங்கை கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியுள்ளது. தேர்தலில்ல் காங்கிரஸ் வேட்பாளரே, பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டது காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் இருக்கிறது. வாங்கோய் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளர் ஒய்னம் லுகோய் சிங், என்பிபி வேட்பாளர் குரைஜாம் லோகேன் சிங் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சலாம் ஜாய் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications