முதற்கட்ட தேர்தலில் 173 வேட்பாளர்கள் போட்டி - சூடுபிடிக்கும் மணிப்பூர் தேர்தல் களம்!
மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி 28ம் தேதி 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக மார்ச் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு நேரடி போட்டி நிலவி வருகிறது.

தேர்தல்
மணிப்பூர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 29 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தலில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், சபாநாயகர் கேம்சந்த் சிங், அமைச்சர்கல் பிச்வஜித் சிங், ராஜன் சிங், லுகோய் சிங் மற்றும் வுங்சென் வால்தே போட்டியிடுகின்றனர்.

நட்சத்திர வேட்பாளர்கள்
மணிப்பூர் துணை முதல்வர் யும்னம் ஜோய்குமார் உரிபோக் தொகுதியில் போட்டியிடுகிறார். லெஜிஸ்லேட்டர் ஜெயந்த்குமார் சிங் கெய்ச்மோதாங் தொகுதியில் போட்டியிடுகிறார். மணிப்பூர் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் லோகன் சிங் நூம்பல் தொகுதியில் போட்டியிடுகிறார். மூத்த தலைவர் ஹோகிப் சைகோட் பகுதியில் போட்டியிடுகிறார். முதற்கட்ட தேர்தலில் 18 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என மணிப்பூர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனு
இரண்டாவது கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்டதாகவும், இதுவரை 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்று மாலை வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 13 ஆயிரத்துக்கும் அதிகமான போஸ்டல் ஓட்டுகள் பதிவாகும் என்றும் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நடைபெறவுள்ள தேர்தலில் 60 இடங்களிலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் களமிறங்குகிறது, மணிப்பூர் காங்கிரஸ், நாகா கட்சி என மாநிலக் கட்சிகளும் வலுவாக களத்தில் இறங்கியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications