மணிப்பூர் தேர்தல் ரேஸில் முந்துவது யார்? - அனல் பறக்கும் பிரசாரத்தால் அதகளப்படும் வடகிழக்கு
இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சமபலத்துடன் மோதி வருகின்றன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது.
மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 28ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ம் தேதியும் நடைபெற உள்ளது.

பாஜக
மணிப்பூர் மாநிலத்தில் இதற்குமுன் பாஜக பெரும்பான்மை பெற்றது கிடையாது. இந்நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைத்துப் போட்டு மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது பாஜக. தற்போது தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ்
மணிப்பூரில் 2002 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் ஆட்சிசெய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஓக்ராம் இபோபி சிங் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியை வலுவான கட்சியாக மாற்றினார். காங்கிரஸ் கட்சி மணிப்பூரில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது. 2017 தேர்தலிலும் காங்கிரஸ் தேவையான இடங்களைப் பெற்றிருந்தது. ஆனாலும் சூழ்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்தது பாஜக என மணிப்பூர் காங்கிரஸ் குற்றம்சாட்டிவருகிறது.

வெற்றி யாருக்கு
மணிப்பூரில் பாஜக இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில், பாஜக கூட்டணியிலிருக்கும் நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், பார்வர்டு ப்ளாக் கட்சி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, மதசாற்பற்ற ஜனதாளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. தனித்துப் போட்டியிடுவதாலும் மாநில பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசல் நடப்பதாலும் மணிப்பூரில் பாஜகவுக்கு கொஞ்சம் பின்னடைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

மெஜாரிட்டி
பாஜக கடந்த தேர்தலில் மெஜாரிட்டில் இல்லாமல் இருந்ததால், இந்தத் தேர்தலில் தனித்து இருந்தாலும், மணிப்பூரில் தங்கள் கட்சிக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கும் என சோதித்துப் பார்க்கவும் தயாராகி இருக்கிறது பாஜக. ஆனால், கடந்த தேர்தலில் நடந்ததுபோல், தேர்தலுக்குப் பிறகு எதுவும் நடக்கலாம் என்பதால், காங்கிரஸ் கட்சி கொஞ்சம் அச்சத்துடனேயே காணப்படுகிறது. மணிப்பூரில் பாஜக வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறி இருந்தாலும், காங்கிரஸ் அதற்கு ஈடு கொடுத்து பிரசாரம் செய்கிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications