For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'சாய்வாலா பி.எம்' முன்னிலையில் ஹரியானா முதல்வராக பொறுப்பேற்ற 'விவசாயி' கட்டார்

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: மனோகர் லால் கட்டார் ஹரியானாவின் முதல் பாஜக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 15ம் தேதி நடைபெற்ற ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய மனோகர் லால் கட்டார் முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

கட்டார் இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் கவிதா ஜெயின், மாநில பாஜக தலைவர் ராம் பிலாஸ் சர்மா, அபிமன்யூ, ஓம் பிரகாஷ் தன்கர், அனில் விஜ், நர்பிர் சிங், விக்ரம் சிங் தெகேதர், கிருஷ்ண குமார் பேடி, கரண் தேவ் கம்போஜ் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Manohar Lal Khattar sworn in as CM of BJP's first govt in Haryana

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர்கள் அமித் ஷா, எல்.கே. அத்வானி, மனோகர் ஜோஷி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜி, குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல், பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜாட் சமூகத்தை சேராத ஒருவர் ஹரியானா முதல்வராகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்தபோது தான் ஒரு விவசாயி, டியூஷன் எடுப்பவர் என்று தெரிவித்திருந்தார் கட்டார்.

English summary
Manohar Lal Khattar hsa taken oath as CM of Haryana on sunday. The function was attended by PM Modi, BJP chief Amit Shah, party leaders and union ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X