மராத்தா கிராந்தி மோர்ச்சாவின் பிரம்மாண்ட பேரணி... ஸ்தம்பித்த மும்பை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் மராத்தா கிரந்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்திய பேரணியால் மாநகரமே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

அகமதாபாத் மாவட்டம் கோப்பர்டி கிராமத்தில் 14 வயதுடைய சிறுமி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்காக மராத்தாக்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தி வருகின்றனர்.

Maratha Kranti Morcha rally 2017 in Mumbai

இதன் காரணமாக தானே கிழக்கு விரைவு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி, மராத்தா கிரந்தி அமைப்பினர், பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மும்பையின் முக்கிய பகுதிகளில் கூடிய மராத்தா கிரந்தி அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் ஈடுபட்டதால், மும்பை நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

TN Govt., has to free Rajiv case convicts- Rally in Chennai - Oneindia Tamil

மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், புறநகர் பகுதிகளில் இயங்கும் சுங்கச் சாவடிகளில் இன்று ஒருநாள் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Marathas are holding a protest march in Mumbai demanding reservation and death penalty for the culprits of the Kopardi gangrape-murder.
Please Wait while comments are loading...