மனைவியே... வேலைக்கு செல்பவரை திருமணம் செய்துகொள்! தற்கொலைக்கு முன்பு கணவரின் உருக்கமான மெசேஜ்!
போபால்: மத்திய பிரதேசத்தில் பிடெக் படித்து 35 வயது வாலிபர் வேலையின்றி இருந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. இதனால் மனமுடைந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். முன்னதாக அவர் தனது மனைவிக்கு ‛‛வேலைக்கு செல்பவரை திருமணம் செய்து கொண்டு... மகிழ்ச்சியாக வாழ்'' என மெசேஜ் அனுப்பிய சோக சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா அருகே சிந்த்வாரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவருக்கும் சமோடா தில்வாரி என்பவருக்கும் 2020 ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சமோடா தில்வாரி வனத்துறை அதிகாரி ஆவார்.
பிடெக் முடித்துள்ள சதீஷ் தனது மனைவியுடன் ஹர்தாவில் வசித்து வந்தார். இந்நிலையில் சதீஷ் வேலையின்றி வீட்டில் இருந்தார். இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

வேலை இல்லாததால் தகராறு
அதாவது மனைவி சமோடா, சதீசிடம் விரைவில் வேலை தேடி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இருப்பினும் சதீசுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் கணவர்-மனைவி இடையே பிரச்சனை அதிகரித்து விரிசலும் வீரியமானது. மேலும் அடிக்கடி இருவருக்கும் தகராறும் ஏற்பட்டது. இதனால் இருவரும் மனம் உடைந்தனர். மேலும் இருவரும் விவகாரத்து கோரி விண்ணப்பம் செய்தனர். இது நிலுவையில் உள்ளது.

மனைவிக்கு மெசேஜ்
இந்த நிலையில் சமோட்டா வேலை விஷயமாக ரத்ஹான் சென்றார். வீட்டில் சதீஷ் தனியாக இருந்தார். வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்த அவர் தனது மனைவி சமோடாவுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், 'நான் போகிறேன். நீ நன்றாக வாழ வேண்டும். நல்ல பணியில் உள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்'' என குறிப்பிட்டு இருந்தார்.

தூக்கிட்டு தற்கொலை
இந்த மெசேஜை சமோடோ உடனடியாக பார்க்கவில்லை. மறுநாள் காலையில் தான் பார்த்தார். இதையடுத்து உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் வருவதற்குள் போலீசார் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது சதீஷ் தூக்கில் பிணமாக கிடந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

2 பக்கத்துக்கு கடிதம்
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சதீஷ் 2 பக்கத்துக்கு எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், தனது பிரச்சனைகள் குறித்தும், தற்கொலை முடிவு பற்றியும், மனைவி குறித்தும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications