‘அதிகபட்ச ஈகோ, குறைந்தபட்ச பச்சாதாபம்’.. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்
ராய்ப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடியை 'அதிகபட்ச ஈகோ, குறைந்தபட்ச பச்சாதாபம்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் நவ ராய்ப்பூர் பகுதியில் புதிய சட்டப்பேரவை, கவர்னர் மாளிகை, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் குடியிருப்புகள், புதிய சர்கியுட் வீடு உள்ளிட்டவை கட்டும் திட்டத்துக்கான பூமி பூஜை விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது இந்த பணிகள் அனைத்தையும் சத்தீஸ்கர் அரசு நிறுத்தி உள்ளது.

இந்நிலையில் தொற்றுநோய் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா திட்டம்) கட்டுமான பணியை மேற்கொண்டு வருவதை காங்கிரஸ் தலைமை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் ஒரு புதிய சட்டமன்ற வளாகத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தியதை குறிப்பிட்டு ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்
"அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, ஜனநாயகத்தில் ஒரு பதிலளிக்கக்கூடிய மற்றும் பொறுப்பான அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு சத்தீஸ்கர் அரசை பாருங்கள். சத்தீஸ்கர் அரசு, மக்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது. கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளை இரண்டு மடங்கு ஆக்கி உள்ளது. ஆகவே எப்போது இதை நீங்கள் கற்று கொள்வீர்கள். சென்ட்ரல் விஸ்டா (புதிய நாடாளுமன்ற வளாகம்) பைத்தியக்காரதனத்தை எப்போது நிறுத்துவீர்கள்? " என்று அவர் கேட்டுள்ளார்.
மேலும் ஜெய்ராம் ரமேஷ தனது ட்விடில் பிரதமர் நரேந்திர மோடியை 'அதிகபட்ச ஈகோ, குறைந்தபட்ச பச்சாதாபம்' உள்ளவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை என்றும் மோடி அரசை மோசமாக தாக்கி உள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications