ராஜ்யசபா எம்.பி. பதவி... மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் ராஜ்யசபா எம்.பி.பதவி ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து பேசுவதற்கு மாயாவதி முற்பட்டார். அப்போது மாநிலங்களவை துணை தலைவர் குரியன் அவருக்கு பேச அனுமதி வழங்கவில்லை.

Mayawathi's resignation letter accepted

இதைத் தொடர்ந்து தலித்துகள் மீது தாக்குதல் குறித்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை எனில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலையே ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியை சந்தித்து அளித்தார். இந்நிலையில் இன்று ஹமீது அன்சாரியை மாயாவதி நேரில் சந்தித்தார்.

பின்னர் தன் கைப்பட எழுதிய 2-ஆவது ராஜினாமா கடிதத்தை அவரிடம் மாயாவதி வழங்கினார். இதைத் தொடர்ந்து அவரது ராஜினாமா ராஜ்யசபாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bahujan Samaj Party chief Mayawati's resignation was accepted today after she met Vice President Hamid Ansari, the chairman of the Rajya Sabha, with a second letter, a one-line handwritten note.
Please Wait while comments are loading...