நாகலாந்து முதல்வர் மகள் திருமண நிகழ்ச்சி.. பிரேக் டான்ஸ் போட்ட டெம்ஜெம் இம்னா.. ரசித்த நெட்டிசன்கள்!
கோஹிமா: நாகலாந்து முதல்வர் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில அமைச்சர் டெம் ஜெம் இம்னா விருந்தினர்களுடன் அங்கு ஒலிபரப்பாகும் இசைக்கு ஏற்ப ஜாலியாக பிரேக் டான்ஸ் போடும் வீடியோ காட்சிகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த மாநிலத்தில் உயர் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சராக இருப்பவர் டெம்ஜெம் இம்னா.

திருமண நிகழ்ச்சியில் ஆட்டம்
வடகிழக்கு மக்களுக்கு உரிய பிரத்யேக முக அமைப்பு கொண்ட டெம் ஜெம் இம்னா தனது நகைச்சுவையான கருத்துக்களால் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர். டெம் ஜெம் இம்னா போடும் ஒவ்வொரு பதிவுகளும் இணையத்தில் ரசிக்க வைக்கும் படியாக இருக்கும். இதன் காரணமாக அவரது பதிவுகள் அனைத்தும் டிரெண்டிங் ஆகக்கூடியது. இந்த நிலையில், நாகலாந்து முதல்வர் நேயிபு ரியா மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் டெம் ஜெம் இம்னா அலாங், திருமண விருந்தின் போது ஜாலியாக ஆட்டம் போட்ட காட்க்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வார்த்தைகளால் முடியாததை உடல் சொல்கிறது
திருமணத்திற்கு வந்த பிற விருந்தினர்களுடன் அங்கு ஒலிபரப்பாகும் இசைக்கு ஜாலியாக நடனமாடும் பதிவுகளை டெம்ஜெம் இம்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு நெட்டிசன்களை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. நடனமாடும் வீடியோவை பதிவிட்டு அதற்கு கேப்ஷனாக, வார்த்தைகளால் முடியாததை உடல் சொல்கிறது. முதல்வர் நெய்பியு ரியோ மகளின் திருமண நிகழ்ச்சியில் நானும் நடனம் ஆடினேன்" என்று பதிவிட்டுஇருக்கிறார்.

நீங்கள் நகைச்சுவை உணர்வுமிக்கவர்..
இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. அருமை, அட்டகாசம்,அழகாக உள்ளது. வெல்டன் என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை வாரி குவித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், நீண்ட நாட்களாவே உங்களை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்ந்து வருகிறேன். "நீங்கள் நகைச்சுவை உணர்வுமிக்க அருமையான நபர்" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து
அதேபோல்,நெட்டிசன்கள் பலரும் உங்கள் நடனம் அருமை என்றும் டெம்ஜென் இம்னாவாவால் ஆட முடியாது என்று யார் சொன்னது? எனவும் பதிவிட்டு டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். டெம்ஜென் இம்னா தனது சமூக வலைத்தளத்தில் நகைச்சுவை உணர்வுகளோடு பதிவுகளை போடுவதில் ஆர்வம் கொண்டவர். இதற்காகவே இவருக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால்
அடிக்கடி டெம்ஜென் இம்னா நகைச்சுவை உணர்வோடு பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ''நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள், பிரபலத்தை போல உணர்கிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த ட்விட் பதிவுகளை நெட்டிசன்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில்
அதேபோல், கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு பதிவை இம்னா வெளியிட்டு இருந்தார். அதில், ''வாழ்க்கை ஒரு பயணம், பயணத்தை ரசியுங்கள், உணவுதான் வாழ்க்கை, ஒருபோதும் உங்கள் உணவை தவற விட்டு விடாதீர்கள்'' என்று பதிவிட்டு இருந்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications