ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை படைத்துள்ள மிதாலி ராஜ்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil
Mithali Raj
Getty Images
Mithali Raj

மகளிருக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவரான மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.

கடந்த புதனன்று பிரிஸ்டல் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி ஒன்றில், 69 ஓட்டங்கள் குவித்த நிலையில் மிதாலி ராஜ் இந்த சாதனையை அடைந்தார்.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சார்லெட் எட்வர்ட்ஸ், 5,992 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலில் இதுவரை முதலிடம் வகித்து வந்தார். தற்போது 6,028 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த சாதனையை மிதாலி ராஜ் முறியடித்துள்ளார்.

Mithali Raj
Getty Images
Mithali Raj

1999-ஆம் ஆண்டு தனது அறிமுக போட்டியில் விளையாடிய மிதாலி, இதுவரை 183 சர்வதேச ஒரு நாள் போட்டிகள், 10 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 63 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது பேட்டிங் சராசரி 51.52.

மிதாலி ராஜுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் சரியான தருணங்களில் கிடைத்தது என நான் நினைக்கவில்லை என சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற சார்லெட் எட்வர்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர் ஒரு தரமான ஆட்டக்காரர். அதிரடி ஆட்டக்காரர்கள் பரிசுகள் பெறுவார்கள். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமான சராசரியை கொண்டிருப்பது சிறப்பான சாதனை என அவர் கூறியுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்து நடைபெற உள்ள ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ள இந்தியா, அந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய சாதனை படைத்துள்ள மிதாலி ராஜ்

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
India captain Mithali Raj has become the leading run-scorer in women's one-day international cricket.
Please Wait while comments are loading...