For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்தது பாஜக! அத்வானி முன்மொழிந்தார்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

லோக்சபா தேர்தலில் ஆட்சி அமைக்க பெற வேண்டிய இடங்கள் 272. இதைத் தாண்டி 282 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

நாட்டில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக பாஜக திகழ்கிறது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.

Narendra Modi unanimously elected as leader of BJP Parliamentary party

நாடாளுமன்ற மைய மண்டபத்தில்..

இதற்காக இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் தரையைத் தலையால் தொட்டு வணங்கினார்.

பின்னர் மைய மண்டபத்தில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் "பாஜக நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடியை முன்மொழிகிறேன்" என்று அத்வானி குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, கரிய முண்டா, கோபிநாத் முண்டே, ரவிசங்கர் பிரசாத், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் மோடியின் பெயரை வழிமொழிந்தனர்.

முறைப்படி தேர்வானார்

பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக ராஜ்நாத்சிங் முறைப்படி அறிவித்தார். அப்போது பாரதிய ஜனதா எம்;.பிக்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். பின்னர் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து மூத்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வரிசையாக மோடிக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அத்வானியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் மோடி. மோடியை ஆரத்தழுவி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அத்வானி.

அப்போது பேசிய ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி பிரசாரத்தால்தான் பாஜக வென்றது. இந்திய அரசியலில் பாரதிய ஜனதா ஒரு புறம், இதர கட்சிகள் மற்றொரு புறம் என்ற நிலை உருவாகி இருக்கிறது என்றார்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற உள்ளது.

English summary
Narendra Modi was formally elected the BJP Parliamentary leader after his name was proposed by BJP veteran L K Advani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X