அரசமைத்ததும் மோடி, ராமர் கோவிலை கட்ட வேண்டும்- ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்
டெல்லி: நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததும், மூன்று முக்கியப் பணிகளுக்கு மோடி முக்கியத்துவம் தர வேண்டும். ராமர் கோவிலை அயோத்தியில் கட்ட வேண்டும், அரசியல் சாசனச் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.ஜி.வைத்யா கூறியுள்ளார்.

இவை அனைத்தையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மோடி செய்ய வேண்டும் என்றும் வைத்யா தெரிவித்துள்ளார்.
இதுகுரித்து அவர் கூறுகையில், இந்த மூன்று முக்கிய விஷயங்களிலும் மோடி அரசு ஆக்கப்பூர்வமான, வேகமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இந்த பிரச்சினைகளில் அரசின் சார்பில் முதல் நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். இருப்பினும் இவை அனைத்தும் எனது சொந்த கருத்துத்தான். ஆர்எஸ்எஸ்ஸின் கருத்து அல்ல.
ஆனால் இந்த மூன்று பிரச்சினைகளிலும் தனது கவனத்தையும், முக்கியத்துவத்தையும் பாஜக குறைத்துக் கொண்டதால்தான் 2004 தேர்தலில் அது தோல்வியடைய காரணம் என்பதை மறந்து விடக் கூடாது.
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு மட்டும் 230 முதல் 240 சீட்கள் கிடைக்கும் என்பது எனது கணிப்பு. மேலும், மத்தியில் நிலையான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் வைத்யா.
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ்ஸின் தினசரியான தருண் பாரத்தின் முன்னாள் ஆசிரியர் சுதிர் பாதக் இதுகுறித்துக் கூறுகையில், இப்படிப்பட்ட கோரிக்கைகள் நியாயமானவையே. இதனால் பாஜக அரசின் சுமூகமான செயல்பாட்டுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
தற்போது உள்ள ஆர்.எஸ்.எஸ், தலைமையும், பாஜக தலைமையும் ஒத்த வயது கொண்டவர்களையே கொண்டுள்ளன. எனவே இவற்றை மிகவும் திறமையாக இரு தரப்பும் இணைந்து செயல்படுத்த முடியும், அமல்படுத்த முடியும். மேலும் கடந்த பாஜக அரசுகளை விட தற்போது அமையப் போகும் பாஜக அரசு இவற்றை திறமையாக கையாளும் என்பதும் எனது கணிப்பாகும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சில முக்கியக் கவலைகளை மோடி புறக்கணிக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன். இருப்பினும் பிராந்தியக் கட்சிகளின் ஆதரவையும் மோடி பெறுவார் என்பதால் அவர்களின் கட்டாயங்களும், நெருக்கடிகளும் கண்டிப்பாக வரும். ஆனால் இதை மோடி திறமையாக சமாளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications