For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்து எங்கெல்லாம் போகப் போகிறார் மோடி.. வாங்க "டூர் பிளானரைப்" பார்ப்போம்!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரதமர் நரேந்திர மோடி அடுத்து பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த வருடக் கடைசி வரை அவரது டூர் டைரி நிரம்பி வழிகிறது.

பிரதமரானது முதல் வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரதமர் என்று பேச்சுக்கள் எழுந்தாலும் கூட அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் பிரதமர்.

சமீபத்தில் அவர் அயர்லாந்து, அமெரி்க்காவுக்கு ஒரு வார கால பயணம் மேற்கொண்டு விட்டு நேற்று இரவுதான் ஊர் திரும்பினார். இந்த நிலையில் அடுத்தடுத்து அவர் பல நாடுகளுக்குப் போகவுள்ளார்.

சவூதி அரேபியா

சவூதி அரேபியா

நவம்பர் 7ம் தேதி பிரதமர் மோடி சவூதி அரேபியா செல்லவுள்ளதாக ஒரு திட்டம் உள்ளது. இருப்பினும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

அடுத்த வாரமே பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம் செல்லவுள்ளதாக இன்னொரு தகவல் உள்ளது. இதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இங்கிலாந்து

இங்கிலாந்து

நவம்பர் 12 முதல் 14 வரை மூன்று நாட்களுக்கு அவர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோரை அவர் சந்திக்கிறார்.

துருக்கி

துருக்கி

அதை முடித்துக் கொண்டு அங்கிருந்தபடியே அவர் துருக்கி செல்கிறார். நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் துருக்கியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

மலேசியா

மலேசியா

நவம்பர் 20ம் தேதி மலேசியா செல்லும் அவர் 22ம் தேதி வரை அங்கு டிரிப் அடிக்கிறார். ஏசியான் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

டிசம்பரில் பாரீஸ் போகிறார்

டிசம்பரில் பாரீஸ் போகிறார்

டிசம்பர் மாதம் பாரீஸில் நடைபெறும் உலக காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.

English summary
PM Modi is all set to visit SIngapore, Saudi, England and other nations till the end of the year 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X