For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது சாதாரண வெற்றி கிடையாது.. வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    திரிபுராவில் ஆட்சியை புடித்த பாஜக... ஏழை முதல்வரை வீட்டுக்கு அனுப்பிய மக்கள் - வீடியோ

    டெல்லி: வடகிழக்கு மாநில பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், பல்வேறு கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பாஜக களம் கண்டது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாநிலங்களில் பாஜக கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ளது.

    Modi thank North East people for election victory

    திரிபுராவிலும், நாகாலாந்திலும் பாஜக கூட்டணி ஆட்சிகள் அமையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றாலும் கூட ஆட்சி அமைக்க பாஜகவிடுமா அல்லது, கூட்டணிகள் துணையோடு தட்டிப்பறிக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

    இதனிடையே பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டுகளில் கூறியுள்ளதாவது:

    பாஜகவின் வளர்ச்சி கொள்கைகளும், மதிப்பு மிக்க அதன் கூட்டணி கட்சிகளாலும், இம்மாநில மக்கள் ஆதரவை தந்துள்ளனர். மக்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய உழைப்போம்.

    திரிபுரா சகோதர, சகோதரிகளுக்கு நன்றி கூற வார்த்தைகளே போதாது. பாஜவுக்கு அவர்கள் அளித்த ஆதரவு அபாரம். திரிபுராவுக்கு நல்ல மாற்றத்தை கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.

    திரிபுராவில் பாஜக பெற்ற வெற்றி சாதாரண தேர்தல் வெற்றி கிடையாது. பூஜ்யத்தில் இருந்து சிகரத்திற்கு பாஜக பயணித்துள்ளது. பாஜக அமைப்பின் பலமும், எங்கள் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளுமே இதற்கு காரணம். பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    இவ்வாறு மோடி தனது பல டுவிட்டுகளின் மூலம் பாஜக வெற்றிக்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

    English summary
    "People of Meghalaya, Nagaland and Tripura have spoken! I thank the people of these states for supporting the good governance agenda and ‘Act East Policy’ of BJP & our valued allies. We remain committed to working towards fulfilling the dreams & aspirations of the people" says Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X