ஜப்பான் செல்கிறார் மோடி.. ராணுவம், பொருளாதாரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து
அடுத்த மாதம் 11ம் தேதி பிரதமர் மோடி ஜப்பானுக்கு செல்கிறார். அங்கு ராணுவம், பொருளாதாரம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: நவம்பர் 11ம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார். அப்போது, ராணுவம் மற்றும் பொருளாதாரம் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு தினங்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் செல்ல திட்டமிட்டிருக்கிறார். இந்தியா ஜப்பான் ஆகிய இருநாட்டு பிரதமர்களும் சந்தித்துக் கொள்ளும் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேச உள்ளார்.

அவருடன் அரசு அதிகாரிகள் குழு ஒன்றும் செல்கிறது. இந்த இரு நாள் பயணத்தின் போது இந்தியா ஜப்பான் உறவை மேம்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. அப்போது, பொருளாதாரம், ராணுவம், அறிவியல் ஆய்வு குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக இருநாட்டு பிரதமர்கள் சந்திக்கும் ஆண்டு மாநாட்டு ஜப்பானில் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்கு சென்று மாநாட்டில் பங்கேற்றார். இரண்டாவது முறையாக நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க மோடி அடுத்த மாதம் ஜப்பானுக்கு செல்கிறார். கடந்த ஆண்டு இரு நாட்டு பிரதமர்களின் இரண்டாவது ஆண்டு சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications