For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வானிலை அப்டேட்: கர்நாடகா, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்.. பெங்களூருவுக்கு மழைக்கு வாய்ப்பு

கர்நாடகா, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்..

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூரு நகரில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

    டெல்லி: தென்மேற்கு பருமவழை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கடலரோ இந்திய பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் குறைந்த அளவு முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்மேற்கு பருவமழையானது கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், தமிழகம், புதுவையின் சில பகுதிகள், ராயலசீமா, கடலோர ஆந்திராவின் சில பகுதிகள், தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதிகளில் மேலும் தீவிரமடைந்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Monsoon updates: SW monsoon advances to Karnataka, TN; Rains expected in Bengaluru

    மத்திய அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால், கர்நாடகா, ராயலசீமாவின் இதர பகுதிகள், தெற்கு கொங்கன், கோவா,தெலுங்கா மற்றும் கடலோர ஆந்திரா, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தின் மழையின் தாக்கம் இருக்கும். அடுத்த 2-3 நாட்களுக்கு மகாராஷ்டிரா, தெலுங்கானா, கடலோர ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை சாதகமானதாக இருக்கும்.

    Monsoon updates: SW monsoon advances to Karnataka, TN; Rains expected in Bengaluru

    புயல் உருவாவதற்கான சாத்தியங்கள் கொங்கண், கோவா பகுதியில் காணப்படுகிறது. இது மெதுமெதுவாக மகாரஷ்டிரா கடலோரப் பகுதியை நோக்கி நகருவதாக ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

    Monsoon updates: SW monsoon advances to Karnataka, TN; Rains expected in Bengaluru

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 29-ந் தேதி தொடங்கியது. ஆனாலும் 3 நாட்களுக்குப் பின்னரே ஜூன் 1-ந் தேதி கர்நாடகாவில் தொடங்கியது. கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா உள் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்திருந்தது.

    வழக்கமான மழை அளவை விட 40% கூடுதல் மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Southwest monsoon has advanced into Karnataka, some parts of Tamil Nadu and other parts of coastal India, as pert India Meteorological Department (IMD)'s latest weather bulletin. With this, low to moderate rainfall can be expected in Bengaluru and other parts of interior Karnataka in the next 24 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X