மோர்பி கேபிள் பாலம் விபத்து: இது தான் குஜராத் மாடலா?.. மோடிக்கு திக்விஜய் சிங் கேள்வி
அகமதாபாத்: குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், இது தான் குஜராத் மாடலா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் இருந்த கேபிள் பாலம் நேற்று மாலை அறுந்து விழுந்தது.
இதில் அந்த பாலத்தில் நின்று கொண்டிருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் 132 பேர் பலியாகினர்.

4 நாட்களே ஆன நிலையில்..
மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 177 பேர் மீட்கபட்டுள்ளதாகவும், மேலும் 100 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலம் சீரமைக்கப்பட்டு 4 நாட்கள் கூட ஆகாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளதால் அந்த மாநிலத்தில் ஆளும் பாஜகவை எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

திக்விஜய் சிங் கேள்வி
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், குஜராத் மோர்பி பாலம் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடியின் செயலா என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட் பதிவில், மோர்பி பாலத்தில் சீரமைப்பு பணிகள் 6 மாதமாக நடந்தது. ஆனால் 5 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் அறுந்து விழுந்துவிட்டது.

தேர்தல் வருவதால் அவசர அவசரமாக
இது தான் குஜராத்தில் உங்களது 27 ஆண்டுகால சாதனையா?.. 27 ஆண்டுகளாக அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. இது தான் வளர்ச்சியா.. பிட்னஸ் சான்றிதழ் இல்லாமல் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க பாஜக அரசு எப்படி அனுமதித்தது. விரைவில் குஜராத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் மக்களை கவருவதற்காக தான் இந்த பாலங்கள் திறக்கப்பட்டதா? சீரமைக்கும் பணிகள் எப்படி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது? இதில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று பதிவிட்டுள்ளார்.

கடவுளின் செயலா? மோசடி செயலா?
மற்றொரு ட்விட் பதிவில், "கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்தனர். இதற்கு மம்தா பானர்ஜியை குறை கூறி பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். தற்போது குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இது கடவுளின் செயலா அல்லது மோசடியின் செயலா என்பதை மோடி விளக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications