பன்டி, இந்தா பிடி உன்னோட 3டி போட்டோ... கலக்கும் மும்பை வெஸ்ட்சைட் ஷோரூம்!
மும்பை: மும்பையிலுள்ள ஒரு பிரபல ஆடைகள் ஷோரூமில் சிறுவர், சிறுமிகளின் 3டி வடிவம் அவர்களுக்கே அளிக்கப்பட்டது.
மும்பை, மலாட் இன்பினிட்டி2 மாலிலுள்ள, வெஸ்ட்சைட் ஆடைகள் ஷோரூமில், சிறுவர்களை கவர புதுமையான ஒரு திட்டத்தை வகுத்தனர். அதன்படி, ஷோரூமுக்கு வரும் சிறுவர்களின் உருவத்தை அவர்களுக்கே பரிசளிக்க முடிவு செய்தனர்.

சிறுவர் சிறுமிகளை புகைப்படம் எடுத்து அதை கம்ப்யூட்டரில் 3டி வடிவமாக மாற்றி, பொம்மையாகவும் தயாரித்து தருகின்றனர். அந்த பொம்மை வடிவம் அச்சு, அசலாக புகைப்படம் எடுத்துக் கொண்ட சிறுவர், சிறுமிகளை போலவே உள்ளது.
சிறுவர்கள் எந்த ஆடையை தேர்ந்தெடுக்கிறார்களோ அதே ஆடையை அந்த வடிவத்தில் பொருத்தி கொடுக்கின்றனர். இதற்கு ஒருவருக்கு ரூ.8ஆயிரம் வரை செலவாகும்.
ஸ்பைடர்மேன், சோட்டா பீம் போன்ற கார்ட்டூன் கதாப் பாத்திரங்களின் பொம்மைகளை வாங்கி விளையாடும் குழந்தைகளுக்கு, தங்களது உருவ பொம்மைகளை வைத்து விளையாடுவது புது அனுபவமாக இருப்பதால் துணி ஷோரூமில் குழந்தைகள் பட்டாளம் குவிந்தது.
இந்த ஆஃபர் நவம்பர் 28 முதல் 30ம் தேதிவரை மட்டும் அமலில் இருந்தது.
டாடா நிறுவனத்தின் டிரென்ட் பிராண்டின் ஒரு பிரிவுதான் வெஸ்ட்சைட். 1998ம் ஆண்டு முதல், இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications