கண்கள் சிறியது தான்.. 'கேமிரா எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சிடுவேன்'.. டெம்ஜென் இம்னா ட்விட்!
கோஹிமா: எனது கண்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்.. ஆனால், மைல் தொலைவில் இருந்தாலும் என்னால் கேமராவை பார்க்க முடியும் என்று நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா ட்விட் பதிவிட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா எனது கண்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்.. ஆனால், மைல் தொலைவில் இருந்தாலும் என்னால் கேமராவை பார்க்க முடியும் என பதிவிட்டிருப்பது நெட்டிசன்கள் மத்தியில்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் டெம்ஜென் இம்னா அலோங் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர்.
வடகிழக்கு மாநில மக்களின் முக அமைப்பு கொண்ட டெம்ஜென் இம்னா சற்று குண்டாகவும் சிறிய கண்கள் கொண்டவராகவும் இருப்பார்.

தனக்கென தனி ரசிகர் பட்டாளம்
தன்னைப்பற்றிய உருவக்கேலிக்கு சற்றும் சளைக்காத டெம்ஜென் இம்னா, தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறார். நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது ட்விட்டகள் இணையத்தில் பிரபலம். இந்த நிலையில் டெம்ஜென் இம்னா தனது ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

எனது கண்கள் சிறியதாக இருக்கலாம்
அந்த பதிவில், ''எனது கண்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்.. ஆனால், மைல் தொலைவில் இருந்தாலும் என்னால் கேமராவை பார்க்க முடியும்.. புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க எப்போதும் தயார்.. இதை படிக்கும் போது நீங்கள் சிரிப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது.. காலை வணக்கம்'' என்று பதிவிட்டுள்ளார். டெம்ஜென் இம்னாவின் இந்த ட்விட்டர் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நெட்டிசன்கள் பாராட்டு
நெட்டிசன்கள் பலரும் டெம்ஜென் இம்னாவின் நகைச்சுவை உணர்வை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் நீங்கள் யாரை சொல்கிறீர்கள் என எங்களுக்கு புரிகிறது என்பது போல சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படித்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டெம்ஜென் இம்னா தனது ட்விட்டரில், ''நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள், பிரபலத்தை போல உணர்கிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார்.

சிங்கிளாக இருங்கள்..
இந்த ட்விட்டும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. அதேபோல், மக்கள் தொகையை கட்டுப்படுத்த என்னைப்போல சிங்கிளாக இருந்து விடுங்கள் என்று அவர் பதிவிட்ட டிவிட்டும் நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டிங் ஆனது. அதேபோல், எனக்கு கண்கள் சிறியதாக இருப்பதால் பல நன்மைகள் இருப்பதாகவும் காமெடியாக பதிவிட்டு இருந்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications