For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் சிறுமி கொலை விவகாரம்: என் மகனுக்கு தொடர்பில்லை: காமுகன் விஷாலின் தாய் பேட்டி

காஷ்மீரில் சிறுமி கொலை விவகாரத்தில் என் மகனுக்கு தொடர்பில்லை, அவர் மீரட்டில் இருந்தார் என்று விஷாலின் தாய் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஜம்மு: காஷ்மீரில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தன் மகனுக்கு தொடர்பில்லை என்றும் அந்த சமயத்தில் அவர் மீரட்டில் இருந்தார் என்றும் முக்கிய குற்றவாளியான சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி காட்டுப்பகுதியில் தினந்தோறும் குதிரை மேய்ப்பதை சாஞ்சி ராம் மற்றும் அவரது மகன் விஷால் ஜங்கோத்ரா ஆகியோர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து அந்த சிறுமியை ஜனவரி 10-ஆம் தேதி சாஞ்சி ராம் தனக்கு சொந்தமான இந்து கோயிலில் அடைத்து வைத்திருந்தார். அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 4 நாட்களுக்கு மேலாக சாஞ்சி ராம், மகன் விஷால் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.

7 நாட்கள் கழித்து கொலை

7 நாட்கள் கழித்து கொலை

பின்னர் அந்த சிறுமியை கொலை ஜனவரி 17-ஆம் தேதி கொலை செய்துவிட்டு காட்டுப் பகுதியில் வீசிவிட்டனர். இந்த சம்பவம் 3 மாதங்கள் கழித்து தற்போது வெளியே வந்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றொரு சிறுவனும் ஈடுபட்டிருக்கிறான். இந்த சிறுவன்தான் தனது நண்பர் விஷாலை சிறுமியை பலாத்காரம் செய்ய அழைத்துள்ளான். இதையடுத்து சாஞ்சி ராம் மற்றும் விஷாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீரட்டில் இருந்த விஷால்

மீரட்டில் இருந்த விஷால்

இந்த நிலையில் விஷால் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரது தாய் உள்பட இரு பெண்கள் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறுகையில் காஷ்மீரில் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஜனவரி 12-ஆம் தேதி என் மகன் மீரட்டில் இருந்தார்.

ஆதாரம் உள்ளது

ஆதாரம் உள்ளது

என் மகன் காஷ்மீர் சிறுமியை வன்புணர்வு செய்ய கத்துவா செல்லவில்லை. குறுகிய காலத்தில் மீரட்டில் இருந்து கத்துவா சென்றிருக்க முடியும். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவன் பள்ளிக்கு சென்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதை ஊடகங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.

சாகும் வரை உண்ணாவிரதம்

சாகும் வரை உண்ணாவிரதம்

இந்த விவகாரத்தில் இன்னும் 8 நாட்களுக்குள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு உத்தரவிடாவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல, காட்டாட்சிதான். 8 வயது சிறுமிக்கு மதம் இல்லை, அவரும் எனது மகள்தான். மேலும் வைஷ்ணவிதேவியின் அவதாரம்தான் அந்த சிறுமி.

அரசியல் சித்து

அரசியல் சித்து

சிறுமி விவகாரத்தில் மெஹபூபா முப்தியின் அரசு அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் முஸ்லிம்களுடன் அமைதியாகவே வாழ்ந்து வருகிறோம். பிரிவினை என்பதே கிடையாது. அந்த சிறுமி எனது மகள் என்கிற போதும் இந்து- முஸ்லிம் பிரிவினை என்றே கேள்விக்கே இடமில்லை. சாஞ்சி ராம், விஷாலுக்கு எதிராக மற்றொரு சிறுவனை துன்புறுத்தியே பொய் சாட்சி கூற வைத்துள்ளனர் என்றார் அவர்.

English summary
Vishal, Key accused in Kashmir girl murder case, My son was in meerut, he didnt go for Kathua, says his mother.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X