உங்க பொது சிவில் சட்டம் எங்க நாகாலாந்தில் செல்லாது.. சட்டசபை அதிரடி முடிவு- மத்திய அரசு அதிர்ச்சி!
கோஹிமா: மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் நாகாலாந்து மாநிலத்தில் அமல்படுத்த முடியாத வகையில் தங்களுக்கு அரசியல் சாசனத்தின் 371A-ன் கீழ் சிறப்பு அதிகாரம் இருக்கிறது என அம்மாநில சட்டசபை அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை எப்படியும் மத்திய அரசு நிறைவேற்றும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து நாகாலாந்து மாநில சட்டசபையில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. அம்மாநிலத்தில் ஆளும் அரசில் இடம் பெற்றுள்ள பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பொது சிவில் சட்டம் இந்தியா முழுவதும் அமலானாலும் நாகாலாந்தில் அமல்படுத்த முடியாது; அரசியல் சாசனத்தின் 371A-ன் கீழ் நாகாலாந்துக்கு சிறப்பு அதிகாரம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது; ஆகையால் பொது சிவில் சட்டம், நாகாலாந்தில் செல்லாது என அம்மாநில சட்டசபை கூட்டத்தில் அதிரடியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது சிவில் சட்டத்தில் இருந்து நாகாலாந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்க கோருகிற பொது தீர்மானம் ஒன்றும் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றபட உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. அதனை மத்திய பாஜக அரசு நீக்கியது. ஆனால் நாகாலாந்து, இந்தியாவுடன் இணைகிற போது அம்மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்க வகை செய்தது 371-A பிரிவு. இதன் படி மத அடிப்படையிலான இந்திய நாடாளுமன்ற சட்டங்கள் நாகாலாந்து மாநிலத்துக்கு பொருந்தாது என்பது நடைமுறை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாகாலாந்து அரசியல் தலைவர்கள், இந்திய அரசு ஒப்புக் கொண்டு நடைமுறையில் இருப்பதுதான் 371-A பிரிவு. அதேபோல 16 அம்ச திட்டத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் மத்திய அரசே தாம் ஏற்றுக் கொண்டதை நிராகரிக்கும் வகையில் செயல்படாது என நம்புகிறோம் என்றனர்.
நாகாலாந்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாஜகவின் மாநில தலைவர் தெம்ஜென் இன்னா அலாங் கூறுகையில், நாகாலாந்து மாநில சட்டசபை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஆதரிப்போம் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications