For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் 15வது பிரதமர் நரேந்திர மோடி- முந்தைய 14 பேர் விவரம், பின்னணி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 15வது பிரதமராக பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றார்.

நாடு விடுதலை அடைந்த போது முதலாவது பிரதமராக பொறுப்பேற்றவர் ஜவஹர்லால் நேரு. அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண்சிங் என மொத்தம் 14 பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர்.

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் 1964ஆம் ஆண்டு மே 27-ந் தேதி வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார் ஜவஹர்லால் நேரு.

குல்சரிலால் நந்தா

குல்சரிலால் நந்தா

நேரு மறைவைத் தொடர்ந்து குஜராத்தைச் சேர்ந்த குல்சரிலால் நந்தா 1964ஆம் ஆண்டு மே 27-ந் தேதி முதல் 1964ஆம் ஆண்டு ஜூன் 9 வரையிலும் பின்னர் சாஸ்திரி மறைவைத் தொடர்ந்து 1966 ஜனவரி 11-ந் தேதி வரையிலும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.

லால்பக்தூர் சாஸ்திரி

லால்பக்தூர் சாஸ்திரி

உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் தொகுதி எம்.பியான லால் பகதூர் சாஸ்திரி, நேரு மறைவைத் தொடர்ந்து 1964ஆம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி முதல் 1966ஆம் ஆண்டு ஜனவரி 11 வரை நாட்டின் பிரதமராக இருந்தார்.

இந்திரா காந்தி

இந்திரா காந்தி

1966ஆம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 வரையும் 1980ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி வரையிலும் இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தார்.

மொராஜி தேசாய்

மொராஜி தேசாய்

நாட்டின் காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது பிரதமர் மொராஜி தேசாய். 1977ஆம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி முதல் 1979ஆம் ஆண்டு ஜூலை 28 வரை பிரதமராக பதவி வகித்தார்.

சரண்சிங்

சரண்சிங்

170 நாட்கள் நாட்டின் பிரதமராக இருந்தவர் சரண்சிங். 1979ஆம் ஆண்டு ஜூலை 28-ந் தேதி முதல் 1980 ஜனவரி 14 வரை பிரதமர் பதவி வகித்தார்.

ராஜிவ் காந்தி

ராஜிவ் காந்தி

இந்திரா படுகொலையைத் தொடர்ந்து 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார் ராஜிவ் காந்தி. அவர் 1989ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார்.

வி.பி.சிங்

வி.பி.சிங்

இந்தியாவின் முதலாவது கூட்டணி அரசின் பிரதமரானவர் வி.பி.சிங். 1989ஆம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி முதல் 1990ஆம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி வரை வி.பி.சிங் பிரதமராக பதவி வகித்தார்.

சந்திரசேகர்

சந்திரசேகர்

1990ஆம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி முதல் 1991ஆம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி வரை காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் பதவியில் அமர்ந்திருந்தார் சந்திரசேகர்.

நரசிம்மராவ்

நரசிம்மராவ்

ராஜிவ் படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற 1991ஆம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி முதல் 1996ஆம் ஆண்டு மே 16-ந் தேதி வரை பிரதமராக இருந்தார் நரசிம்மராவ். இவரது ஆட்சிக் காலத்தில்தான் தாராளமய கொள்கை கடைபிடிக்கப்பட்டது.

வாஜ்பாய்

வாஜ்பாய்

பாரதிய ஜனதாவின் முதலாவது பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். 1996ஆம் ஆண்டு மே 16-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதிவரை 13 நாட்கள் பிரதமராக இருந்தார். பின்னர் 1998-99 வரை 13 மாதங்கள் பிரதமராக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் 2004ஆம் ஆண்டு மே 19 வரை 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார் வாஜ்பாய்

தேவகவுடா

தேவகவுடா

1996ஆம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதிவரை பிரதமராக பதவி வகித்தார் தேவகவுடா

குஜ்ரால்

குஜ்ரால்

1997ஆம் ஆண்டு ஏப்ர 21-ந் தேதி முதல் 1998ஆம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார் குஜ்ரால்.

மன்மோகன்சிங்

மன்மோகன்சிங்

2004ஆம் ஆண்டு மே 22-ந் தேதி முதல் 2014ஆம் ஆண்டு மே 17 வரை நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்தவர் மன்மோகன்சிங்.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

2014 லோக்சபா தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாஜகவின் 2வது பிரதமராகியுள்ளார் நரேந்திர மோடி,

English summary
Narendra Modi will be the 15th person to become the prime minister of India, the second BJP leader after Atal Bihari Vajpayee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X