For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் மோடிக்கு நெருக்கமான அமித் ஷா பாஜக தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அமித் ஷா பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 71ல் பாஜக அமோக வெற்றி பெற்றது. முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பாஜக மூத்த தலைவர் அமித் ஷா தான் காரணம் என்று கூறப்பட்டது.

Narendra Modi's close aide Amit Shah likely to be announced BJP president today

இந்நிலையில் பாஜகவின் அடுத்த தலைவராக அமித் ஷா இன்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அவர் பாஜக தலைவராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவரை கட்சியின் தலைவராக்க பாஜக நாடாளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அமித் ஷா தேர்வு செய்யப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமி்த் ஷாவுக்கு பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி, அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினர்.

இந்த ஆண்டில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் அமித் ஷா தலைவர் ஆகியுள்ளதால் அவருக்கு வேலை பளு அதிகம் இருக்கும். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆண்டு வருகிறது.

முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பிரிண்டிங் வியாபாரம் செய்து வந்த அமித் ஷா 1980களில் மோடியை சந்தித்தார்.

முன்னதாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக உள்ள அமித் ஷா மோடி வாபஸ் பெற்ற குஜராத் மாநிலம் வதோதரா லோக்சபா தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

டெல்லி பாஜக தலைவர்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆன பிறகு டாக்டர் ஹர்ஷ்வர்தன் டெல்லி மாநில பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைடுத்து தெற்கு டெல்லி முனிசிபல் கார்பரேஷனின் தலைவரான சதிஷ் உபத்யாய டெல்லி மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார்.

English summary
PM Modi's close Aide Amit Shah is announced as the next president of BJP on wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X