2024 தேர்தலிலும் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்: அமித் ஷா பேச்சு

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று நரேந்திர மோடிதான் பிரதமராக பொறுப்பேற்பார் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில தலைநகர் காந்திநகர் அருகேயுள்ள பன்சார் கிராமத்தில் நடைபெற்ற, அம்மன் கோவில், நவராத்திரி ஆரத்தி விழாவில் பங்கேற்றபோது, கூடியிருந்த கூட்டத்தினரிடையே, இவ்வாறு அமித் ஷா பேசினார்.

நரேந்திர மோடி அக்டோபர் 7ம் தேதியுடன், அதிகார மையங்களில் அமர்ந்து 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார். (முதல்வர் மற்றும் பிரதமராக இருந்த பதவிக் காலம்) உலகிலுள்ள ஜனநாயக நாடுகளில் இதுபோல ஒருவர் மீண்டும், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது அபூர்வ நிகழ்வாகும்.

மோடி ஆட்சி சாதனை

மோடி ஆட்சி சாதனை

2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார். மோடி பிரதமராக இருக்கும் 7 வருடங்கள், அதற்கு முந்தைய 70 ஆண்டு கால ஆட்சிகளை விட சிறப்பானது. 60 கோடி வங்கி கணக்குகளை மோடி திறக்க வைத்துள்ளார். 13 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி காஸ் இணைப்பு கொடுத்துள்ளார். 10 கோடி கழிவறைகளை கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சுகாதார காப்பீடு அட்டைகள்

சுகாதார காப்பீடு அட்டைகள்

5 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு கொடுத்துள்ளார். தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுகாதார காப்பீடு அட்டைகளை 60 கோடி குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார்.

குஜராத்தில் வெற்றி

குஜராத்தில் வெற்றி

இந்த நல்ல பணிகள் காரணமாகத்தான், காந்திநகர் மாநகராட்சி தேர்தலில் பாாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மட்டுமல்லாது நாடு முழுக்க பாஜக வெற்றி பெற, மக்களை மையமாக கொண்டு மோடி செயல்படுவதுதான் காரணம்.

சுய உதவி குழுக்கள்

சுய உதவி குழுக்கள்

சுய உதவி குழுக்கள் மண் கோப்பைகளை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மின்சாரம் மூலம் சுழலும் கோப்பை செய்யும் சக்கரங்களை பெற மோடி அரசு ஏற்பாடு செய்துள்ளது. இப்படி தயாரிக்கும் கோப்பைகள் ரயில்வே துறையால் கொள்முதல் செய்யப்படும். இதனால் வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு, பிளாஸ்டிக் பயன்பாடு குறையும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+