முன்னாள் உ.பி. முதல்வர் என்.டி.திவாரி மரணம்
Recommended Video

டெல்லி: முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் என்.டி. திவாரி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.
இந்தியாவிலேயே இரு மாநிலங்களின் முதல்வராக இருந்த ஒரே தலைவர் திவாரி மட்டுமே. உ.பி. மட்டுமல்லாமல் உத்தரகாண்ட் மாநில முதல்வராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

தனது பிறந்த நாளின்போதே என்.டி. திவாரி மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணமடைந்தார்.
1925ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி பிறந்தவர் என்.டி.திவாரி. உ.பி. முதல்வராக 1976 முதல் 77 வரையிலும், 84 முதல் 85 வரையிலும் பின்னர் 88 முதல் 89 வரையிலும் இருந்துள்ளார். 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் முதல்வராக இருந்தவர் திவாரி.
தீவிர அரசியலை விட்டு விலகிய பின்னர் அவர் 2007ம் ஆண்டு ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு பெண்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி 2009ல் பதவியை விட்டு நீக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் 1986 முதல் 87 வரை பணியாற்றியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications