For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல்: பா.ஜ.க. அணிக்கு 147 இடங்கள்; ஐ.ஜனதா தளம் அணிக்கு 64 இடங்கள்- ஜீ நியூஸ் சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 147 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ஜீ நியூஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு 64 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் அக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 12-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 8-ந் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

NDA predicted to win 147 seats in Bihar Elections, says Zee Survey

இத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, உபேந்திர குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, மாஞ்சியின் அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர இடதுசாரிக் கட்சிகள் தனி அணியாக போட்டியிடுகின்றன. இதுவரையிலான தேர்தல் கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சம அளவிலான இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • இந்நிலையில் ஜீ மீடியா குரூப் நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 147 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 29,30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட இக்கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்:
  • தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 147 இடங்கள் (53.8% வாக்குகள்), ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கு 64 இடங்கள் (40.2% வாக்குகள்) கிடைக்கும்.
  • பெரும்பான்மையினராக உள்ள யாதவ் சமூகத்தினரில் 50.2% பேர் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணிக்கும் 43.7% பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர்.
  • இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு வாக்களிப்பதாக 57.9%; தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 35.9% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
  • பொதுவாக இந்துக்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 57.4%; ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அணிக்கு 36.6% பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.'
  • பெண்களில் 58.1% பேர் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் 35.2% பேர் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அணியையும் ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.
  • நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 54.6% ; ஐக்கிய ஜனதா தளம் அணிக்கு 39.7% பேர் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
English summary
Zee Media Group survey has indicated that the BJP-led NDA will get 147 seats; JDU alliance will bag 64 seats in the Bihar Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X