For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய பேரிடர் குழுவின் துணைத்தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் ராஜினாமா

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் முடிவினைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத்தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

முன்னதாக டெல்லியில் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசானது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது நியமிக்கப்பட்ட, தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆளுநர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வரும் நிலையில், தற்போது பேரிடர் குழு உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் என்பது மத்திய இணையமைச்சருக்கு இணையாக பதவியாகும். இந்தியா முழுவதும் மொத்தம் 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளனர். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நரேந்திர மோடி உள்ளார்.

இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி உட்பட மேலும் 5 உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

English summary
Five Members from national disaster management authority resigned their job today. Already central Government asks all National Disaster Management Authority members to put in papers yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X