திரிணாமுல் காங். 30; பிஜூ ஜனதா தளம் 13 இடங்களைக் கைப்பற்றும்: என்.டி.டிவி. எக்ஸிட் போல்
டெல்லி: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 30, ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் 13 இடங்களைக் கைப்பற்றும் என்று என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை வெளியாக உள்ளன. நேற்று இரவு என்.டி.டி.வி. தொலைக்காட்சி தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டது.
இதுவரையிலான எக்ஸிட் போல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்.டி.டி.வி.யோ 4 வது இடத்தை திரிணாமுல் காங்கிரஸுக்கு கொடுத்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸுக்கு 30
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 30ஐ திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றும். இடதுசாரிகள் 7, காங்கிரஸ் 4, பாஜக 1 இடத்தைக் கைப்பற்றும்.

ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் 13
ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 13, பாஜக 5, காங்கிரஸ் 3 இடங்களைக் கைப்பற்றும்.

சீமாந்திராவில் ஜெகன் - நாயுடு
சீமாந்திராவைப் பொறுத்தவரையில் ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் தலா 45% வாக்குகளுடன் சமபலத்தில் இருக்கிறது.

சீமாந்திராவில் காங்கிரஸை காணவில்லை
சீமாந்திரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.

சீமாந்திரா ஜெகன் ஆட்சி
சீமாந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 80-100 இடங்களைக் கைப்பற்றும். தெலுங்கு தேசம் கட்சி 75-95 இடங்களைக் கைப்பற்றும்.

தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்.
தெலுங்கானாவில் 17 தொகுதிகளில் டி.ஆர்.எஸ். கட்சி 11 இடங்களையும் காங்கிரஸ் 3, தெலுங்கு தேசம் 2, மஜ்லிஸ் கட்சி 1 இடத்தைக் கைப்பற்றும்.

கேரளாவில் சமபலம்
கேரளாவில் காங்கிரஸ் முன்னணியும் இடது முன்னணியும் தலா 10 இடங்களைக் கைப்பற்றும்.

கர்நாடகாவில் பாஜக 16
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் பாஜக 16, காங்கிரஸ் 10 இடங்களைக் கைப்பற்றும்.

மகாராஷ்டிராவில் பாஜக 34
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அணி 34, காங்கிரஸ் 13, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா 1 இடத்தைக் கைப்பற்றும்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications