283 இடங்களில் பாஜக கூட்டணிக்கு 160: காங்கிரஸ் கூட்டணிக்கு 54- மற்றவை 69- என்டிடிவி!
டெல்லி: என்டிடிவி- ஹன்சா ரிசர்ச் அமைப்பு இணைந்து நாடு முழுவதும் மீண்டும் ஒரு சுற்று கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. மார்ச் மத்தியில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளில் ஒரு பகுதியை என்டிடிவி தலைமை ஆசிரியர் பிரணாய் ராய் நேற்றிரவு வெளியிட்டார்.
இதில் தமிழ்நாடு, பிகார், சட்டீஸ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சீமாந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 283 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, ஒரிஸ்ஸா, பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநில முடிவுகளை இன்று இரவு என்டிடிவி வெளியிடவுள்ளது.

பாஜக 123...
இந்தக் கருத்துக் கணிப்பின்படி வெளியிடப்பட்ட 283 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகளில் பாஜக கூட்டணி (சிவசேனா, தெலுங்கு தேசம், மதிமுக, தேமுதிக, பாமக, ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி ஆகியவை இணைந்து) 160 இடங்களைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. இதில் பாஜக மட்டும் தனித்து 123 இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் 41...
காங்கிரஸ் கூட்டணி (சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை) 54 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் தெரியவந்துள்ளது. அதிலும் கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து காங்கிரஸ் மட்டும் வெறும் 41 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் என்டிடிவி கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இன்னபிற 69...
அதே நேரத்தில் அதிமுக, திமுக, பிகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட பிற கட்சிகள் இந்த 283 இடங்களில் 69 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

சட்டீஸ்கரில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்:
சட்டீஸ்கரில் பாஜக முதல்வர் ரமன் சிங்குக்கு ஆதரவு சரிய ஆரம்பித்துள்ளது. இங்குள்ள 11 இடங்களில் பாஜக 8 இடங்களில் வென்றாலும் இது கடந்த தேர்தலை விட 2 குறைவாகும். அதே நேரத்தில் கடந்த தேர்தலில் வெறும் 1 இடத்தில் வென்ற காங்கிரஸ் இந்த முறை 3 இடங்களைப் பிடிக்கும்.
இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு 44 சதவீத ஆதரவும், காங்கிரசுக்கு 39 சதவீத ஆதரவும் உள்ளது. காங்கிரஸ் ஆதரவு பெருகி வருகிறது.

சீமாந்த்ராவில் மீண்டும் நாயுடு..
கடந்த பல தேர்தல்களிலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த தெலுங்கு தேசம் கட்சிக்கு இந்த முறை அதிக வெற்றிகள் கிடைக்கும் என்று தெரிகிறது. சீமாந்த்ராவில் மொத்தமுள்ள 25 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்துக்கு 14 இடங்கள் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இது கடந்த தேர்தலை விட 10 இடங்கள் அதிகம்.
அதே நேரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 10 இடங்களும் காங்கிரசுக்கு 1 இடமும் கிடைக்கும். தேர்தலுக்குப் பின் நாயுடு பாஜக அணியில் சேரும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவில் டிஆர்எஸ்-காங்கிரஸ் சமபலம்
தனியாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா புதிய மாநிலத்தில் மொத்தமுள்ள 17 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு 7 இடங்களும் காங்கிரசுக்கு 7 இடங்களும் தெலுங்கு தேசத்துக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இங்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சி வெல்லவில்லை. மேலும் தேர்தலுக்குப் பின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் பாஜக அணிக்கு போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

மத்தியப் பிரதேசமும் மொத்தமும் பாஜகவுக்கு..
மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 25 இடங்களில் பாஜக வெல்லும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த முறை 8 இடங்களில் வென்ற காங்கிரசுக்கு வெறும் 4 இடங்களே கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

டெல்லியும் பாஜகவுக்கு..
அதே போல டெல்லியில் மொத்தமுள்ள 7 இடங்களில் பாஜக 4 இடங்களைப் பிடிக்கும் என்றும் ஆட்சியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மிக்கு 2 இடங்களும் காங்கிரசுக்கு ஒரே ஒரு இடமும் தான் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக முட்டை வாங்கியது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில் இப்போது 4 இடங்களைப் பிடிக்கவுள்ளது.
இங்கு பாஜகவுக்கு 34 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சிக்கு 29 சதவீதமும், காங்கிரசுக்கு 23 சதவீதமும் ஆதரவு உள்ளது.

ராஜஸ்தானில் பாஜகவுக்கு வெற்றி...
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 21 இடங்களை பாஜக கைப்பற்றும். காங்கிரஸ் வெறும் 3 இடத்தில் தான் வெல்லும். இந்த மாநிலத்தை சமீபத்தில் கைப்பற்றிய பாஜக முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

கர்நாடகத்தில் பாஜகவுக்கு பிரேக் போடும் காங்கிரஸ்
கர்நாடகத்தில் கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 இடங்களில் 20 இடங்களைப் பிடித்த பாஜகவுக்கு இந்த முறை 16 இடங்களே கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. அதே நேரத்தில் 6 இடங்களில் வென்ற ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் 3 இடங்களில் வென்ற கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஜார்க்கண்ட்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 இடங்களில் பாஜக 10 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் வெல்லும் என்று தெரிகிறது.

பிகாரில் நிதிஷுக்கு பின்னடைவு:
பிகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி்ய முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்கிறது கருத்துக் கணிப்பு. இங்கு மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக தான் 21 இடங்களில் வெல்லும். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 11 இடங்களிலும் நிதிஷ் கட்சி 6 இடங்களிலும் மட்டும் வெல்லும் என்றும், காங்கிரஸ் 2 இடங்களைப் பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனா:
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில் பாஜக-சிவசேனா கூட்டணி 36 இடங்களைப் பிடிக்கும். இந்தக் கூட்டணி கடந்த முறை 16 இடங்களில் தான் வென்றது. காங்கிரஸ்- சரத்பவார் கூட்டணி 10 இடங்களில் மட்டுமே வெல்லும். ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் 2 இடத்தைப் பிடிக்கும்.

இவ்வாறு என்டிடிவி கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இன்று இரவு உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, ஒரிஸ்ஸா, பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநில முடிவுகளை என்டிடிவி வெளியிடவுள்ளது. மேலும் தேசிய அளவிலான கருத்துக் கணிப்பு முடிவையும் வெளியிடவுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications