For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரை பாதுகாக்க நினைத்த நேரு மதவாதியா? பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசி முடித்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

டெல்லி: பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரை பாதுகாக்க நினைத்த முன்னாள் பிரதமர் நேரு மதவாதியா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்..

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மோடி பேசியதாவது:

சி.ஏ.ஏவுக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்பி நாட்டை துண்டாடுகிறது காங்கிரஸ். முஸ்லிம்களை காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களாக மட்டுமே பார்க்கிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியானது முஸ்லிம்களையும் இந்தியர்களாகப் பார்க்கிறது.

Nehru wanted to protect minorities in Pakistan, was he communal, asks PM

இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என இன்று பேசுகிற காங்கிரஸ்தான் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்திய கட்சி. நேரு- லியாகத் அலி ஒப்பந்தத்தின் போது அஸ்ஸாம் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், அடைக்கலம் கோருகிற இந்துக்களுக்கும் முஸ்லிம் குடியேறிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என நேரு சுட்டிக்காட்டியுள்ளார். இதே நாடாளுமன்றத்தில், அடைக்கலம் கோரி வரும் மக்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள்தான் என்றார் நேரு

அப்படியானால் நேரு என்ன மதவாதியா? நேரு என்ன இந்து ராஷ்டிராவை உருவாக்க நினைத்தவரா? என்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் பதிலளிக்க வேண்டும். நேரு- லியாகத் அலி ஒப்பந்தத்தில் சிறுபான்மையினர் என்ற வார்த்தைக்குப் பதில் அனைத்து இன மக்களும் என்றுதானே நேரு குறிப்பிட்டார். அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கத்தால் காஷ்மீர் இந்தியாவில் இருந்து பிரிந்து போகும் என்று உமர் அப்துல்லாவும் பரூக் அப்துல்லாவும் பேசுகின்றனர். தேசத்தின் அரசியல் சாசனத்தை புனிதமாக கருதுகிறவர்கள் இதை எப்படி ஏற்க முடியும்?

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசி முடித்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

English summary
Prime Minister Narendra Modi said had his government walked on the path of Congress, it would not have been able to deliver on issues such as Article 370, Citizenship Amendment Act, and triple talaq.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X