For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளே வராதீர்கள்.. 15 முறை சரமாரியாக சுட்ட நேபாள போலீஸ்.. இந்தியர் ஒருவர் பலி.. எல்லையில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளம் இந்தியா எல்லையில் பீகார் அருகே இந்தியர் ஒருவர் இன்று நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா நேபாளம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேபாளம் எல்லையில் அதிக அளவில் அந்நாட்டு அரசு போலீசாரை குவித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

அங்கு இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதனால் லிபுலேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி நேபாளம் மேப் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.

ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டது.. சீனாவை நம்பி இந்தியாவை சீண்டிய நேபாளம்.. பெரிய ஏமாற்றம்! ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டது.. சீனாவை நம்பி இந்தியாவை சீண்டிய நேபாளம்.. பெரிய ஏமாற்றம்!

துப்பாக்கி சூடு சம்பவம்

துப்பாக்கி சூடு சம்பவம்

இந்த நிலையில் நேபாளம் இந்தியா எல்லையில் பீகார் அருகே இந்தியர் ஒருவர் இன்று நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் அருகே சீதமார்கி பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது. இதில் இந்தியர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். அங்கிருக்கும் இந்தியர்கள் மற்றும் நேபாளம் போலீசாருக்கு இடையே சண்டை வந்ததுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

லால்பாண்டி பகுதி

லால்பாண்டி பகுதி

நேபாளத்தின் லால்பாண்டி ஜான்கி பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது. இந்த பகுதி நேபாளத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வருகிறது. துப்பாக்கி சூட்டில் பலியான நபரின் வயது 25 ஆகும். இந்த துப்பாக்கி சூட்டில் உமேஷ் ராம் மற்றும் உதய் தாக்கூர் என்ற இருவர் மோசமாக காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள். இன்னொரு நபர் லகான் ராய் என்பவர் நேபாளம் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

எங்கே செல்கிறது

எங்கே செல்கிறது

இவர்களின் விவசாய நிலம் நேபாளம் பகுதிக்கு கீழ் வருகிறது. தங்கள் விவசாய நிலத்திற்கு இவர்கள் உழவு செய்ய சென்று இருக்கிறார்கள். ஆனால் எல்லையில் இருந்த நேபாளம் போலீசார் இவர்களை உள்ளேஅனுமதிக்கவில்லை. உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறி நேபாளம் போலீசார் அவர்களிடம் சண்டை போட்டு இருக்கிறார்கள்.

அதிகரிக்கும் சண்டை

அதிகரிக்கும் சண்டை

உங்களை உள்ளே விட முடியாது என்று கூறி மிரட்டி இருக்கிறார். இந்த சண்டை அங்கு பெரிதாகி மோசமாகி உள்ளது. இதில் நேபாளம் போலீசார் இந்தியர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். மொத்தம் 10 முறை வானத்திலும் 5 முறை மக்கள் மீதும் சுட்டு உள்ளனர். இதில்தான் ஒருவர் பலியாகி உள்ளார். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதிகரிக்கும் பதற்றம்

அதிகரிக்கும் பதற்றம்

கடந்த மே 17ம் தேதியே நேபாளம் இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்தியாவில் இருந்து நேபாளம் வரும் நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. நேபாளத்தில் கொரோனா பரவ இந்தியர்கள்தான் காரணம் என்று நேபாளம் அரசு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியர்களை அங்கு எல்லையில் அந்நாட்டு போலீஸ் சரமாரியாக சுட்டு இருக்கிறது.

English summary
Nepal police shoots people Bihar Border: 1 Indian dies, 3 got injured .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X