For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றுக் கொண்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

New Chief Justice of India Dipak Mishra took oath

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே. எஸ்.கேஹரின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு, தற்போது மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை ஜே.எஸ்.கேஹர் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமித்து மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018) அக்டோபர் 2ம் தேதி முடிவடையும்.

English summary
Dipak Mishra took oath as Chief Justice of India. He was the 45th CJI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X