பாஜக வேட்பாளர் ராம்நாத்தை எதிர்த்து போட்டி… மீரா குமாரை அறிவித்தது காங்கிரஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை எதிர்த்துப் போட்டியிடப் போகும் வேட்பாளராக மீரா குமாரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.

ஆதரவு

ஆதரவு

பாஜக அறிவித்துள்ள இந்த வேட்பாளரை பீகார் முதல்வர் நிதீஷ் குமார், லாலு மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக முதல்வர் பழனிச்சாமியும் தனது ஆதரவை நேற்று தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் ஒன்று கூடி டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இதில் இரண்டு இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன.

ராம் நாத்திற்கு எதிர்ப்பு

ராம் நாத்திற்கு எதிர்ப்பு

பாஜக வேட்பாளராக தலித்தை நிறுத்தியுள்ளதால், எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக முடிவெடுப்பது சற்று சிரமம்தான். என்றாலும், ராம் நாத் கோவிந்த் ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதால் அதனை தீவிரமாக எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன.

மாற்று வேட்பாளர்கள்

மாற்று வேட்பாளர்கள்

இந்நிலையில், இன்று கூடிய இந்தக் கூட்டத்தில் ராம் நாத் கோவிந்த்தை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக முதல் பெண் சபாநாயகர் மீரா குமாரை அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சியினரின் பட்டியலில் சுஷில் குமார் ஷிண்டே, பிரகாஷ் அம்பேத்கர், மீரா குமார் உள்ளிட்டோர் இருந்த நிலையில், மீரா குமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Opposition is set to meet to decide on its candidate for the next President of India.
Please Wait while comments are loading...