For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்துவிட்டது... விரைவில் தூக்கிலிடுங்கள்- நிர்பயாவின் தாய்

தாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்துவிட்டது என்று நிர்பயாவின் தாய் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்- வீடியோ

    டெல்லி: தாமதமாக கிடைத்தாலும் நிர்பயா விவகாரத்தில் நீதி கிடைத்துவிட்டது.. எனினும் அந்த நீதி தடைப்படாமல் இருக்க நாங்கள் இன்னும் போராட வேண்டியிருக்கிறது என்று அவரது தாய் தெரிவித்தார்.

    டெல்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி இரவு மருத்துவ கல்லூரி மாணவி தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் வெளியே சென்றுவிட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நடத்துநர், சிறுவன் உள்பட 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    குற்றவாளி

    குற்றவாளி

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் அதே ஆண்டில் டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

    சீராய்வு மனுக்கள்

    சீராய்வு மனுக்கள்

    மீதமுள்ள 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தார். இதையடுத்து அவர்களது சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதுகுறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில் தாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்துவிட்டது. எங்கள் போராட்டம் இத்துடன் நின்று விடாது. தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    நீதி வேண்டும்

    நீதி வேண்டும்

    நீதி தாமதமாக கிடைத்துவிட்டதால் சமூகத்தின் மற்ற பெண்களை பாதிக்கிறது. நீதி துறை அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை விரைவில் தூக்கில் போட்டு நிர்பயாவுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் நீதித் துறையை கேட்டுக் கொண்டார்.

    English summary
    On hearing the Supreme court upholds the Death sentence for Rapists, Nirbhaya's mother says that justice is to all.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X