For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டை உலுக்கிய நிதாரி கொலை வழக்கு.. தொழிலதிபர் உள்ளிட்ட 2 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    நாட்டை உலுக்கிய நிதாரி கொலை வழக்கு.. தொழிலதிபர் உள்ளிட்ட 2 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை- வீடியோ

    டெல்லி: நிதாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அருகே நொய்டாவில் 2005-06ல் தொடர் கொலைகள் அரங்கேறி, அந்த தகவல் வெளியானதும், அது நாட்டையே உலுக்கியது.

    11 பெண்கள் உட்பட 19 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டனர். பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தனர் கொலையாளிகள்.

    தொழிலதிபர் கைது

    தொழிலதிபர் கைது

    இதுதொடர்பான, போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையாளிகள், தொழிலதிபர் மொனிந்தர் சிங் மற்றும் சுரிந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு போலீஸ் விசாரணை திருப்திகரமாக இல்லாததால், சிபிஐயிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 16 வழக்குகளில் ஒன்றான பலாத்கார முயற்சி, கொலை, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    தூக்கு தண்டனை

    தூக்கு தண்டனை

    இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் இவ்விருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 8 வழக்குகளில் இவ்விருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் அரிதினும் அரிதானவை என்ற வாதத்தின்கீழ் வருபவை என்பதால் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

    எலும்பு கூடுகள்

    எலும்பு கூடுகள்

    19 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டபோதிலும், 3 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய ஆதாரம் கிடைக்கவில்லை. மற்ற 16 கொலை-பாலியல் பலாத்காரம் வழக்குகளில் ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு எதிராகவே தீர்ப்புகள் அமைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Businessman Moninder Singh Pandher and Surinder Koli, the main accused in the Nithari killing, were sentenced to death by CBI Special Court in the ninth out of 19 cases against them on Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X