Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த ட்ரெஸோட பவர் தெரியுமா? டிக்கெட்டே எடுக்காம ட்ரெயின்ல போலாம்! காவி உடை பற்றி நித்தியானந்தா கலாய்

Subscribe to Oneindia Tamil

கைலாசா: கடந்த 9 ஆண்டுகள் தான் மேற்கொண்ட ரயில் பயணத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் யாரும் தன்னிடம் டிக்கெட் கேட்டதில்லையென்று நித்தியானந்தா கூறியுள்ளார். இதற்கு காரணம் தான் அணிந்திருந்த காவி உடைதான் என்றும் கூறியுள்ளார்.

'பதான்' திரைப்பட பாடலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே காவி நிற உடையில் கவர்ச்சியாக நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், ஷாருக்கான் மீது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

எதிர்ப்பு

எதிர்ப்பு

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் 'பதான்' திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி தமிழ், தெலுங்கு என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் 'பேஷரம் ரங்' எனும் பாடல் வெளியானது. இப்பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை சுமார் 7 கோடி பேர் இந்த பாடலை கண்டு ரசித்துள்ளனர். ஆனால் மறுபுறம் இந்துத்துவா அமைப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வெளிப்படையாக இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காட்சிகள் மாற்றியமைக்கப்படவில்லையெனில் மத்தியப் பிரதேசத்தில் இப்படம் திரையிடப்படாது என்று கூறியுள்ளார்.

கிண்டல்

கிண்டல்

இந்து மகாசபையின் தேசிய தலைவரான சக்கரபாணி மகாராஜ், "ஷாருக்கானின் இந்த படத்தில் காவியும் இந்து மதமும் அவமதிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் தூங்கி கொண்டிருந்ததா? என்கிற கேள்விதான் எழுகிறது. படத்தை தடைசெய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம். படம் திரையிடப்பட்டால் அதனை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்" என்று கூறியுள்ளார். அதேபோல அயோத்தியின் அனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ் கூறுகையில், "காவி நிறத்தில் பிகினி உடை ஏன் அணிய வேண்டும்? பாலிவுட் திரையுலகம் தொடர்ந்து சனாதன தர்மத்தை கிண்டல் செய்து வருகிறது.

வழக்கு பதிய வேண்டும்

வழக்கு பதிய வேண்டும்

தீபிகா படுகோன் காவி உடையில் பிகினி அணிந்திருந்தாலும், அவருடன் நடனமாடும் ஷாருக்கான் சனாதன தர்மத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். எனவே இந்த திரைப்படம் புறக்கணிக்கப்பட வேண்டும். மீறி திரையிடப்படுமானால் அந்த தியேட்டர்கள் தீயிட்டு கொளுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது இந்த திரைப்படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனையை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் மும்பையில் இந்துத்துவ அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரில் காவி நிறம் தங்களை புண்படுத்தியுள்ளதாகவும் எனவே ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

காவி உடையில் கவர்ச்சி நடனம்

காவி உடையில் கவர்ச்சி நடனம்

அதேபோல மகாராஷ்டிரா பாஜக ஆதரவு எம்பி நவ்நீத் ராணாவும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரே தமிழ் படம் ஒன்றில் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். அதேபோல மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் பாஜக எம்பி பிரக்யா தகூரும் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறு இருக்கையில் காவி உடை குறித்த பேச்சுக்கள் நாடு முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் கைலாசாவிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சர்ச்சை சாமியார் நிதியானந்தா காவி உடை குறித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

காவி உடையின் மகத்துவம்

காவி உடையின் மகத்துவம்

அவர் கூறியதாவது, "அந்த காலங்களில் நான் இந்த (காவி) உடையில் ரயிலில் பயணம் செய்யும்போது என்னிடம் எந்த டிக்கெட் பரிசோதகரும் வந்து டிக்கெட் இருக்கிறதா? என்று கேட்கமாட்டார். நான் 9 ஆண்டுகள் ரயில் பயணம் செய்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது ஒருமுறை கூட நான் டிக்கெட் எடுத்ததில்லை. பெரும்பாலும் முன்பதிவில்லாத பெட்டியில்தான் பயணித்திருக்கிறேன். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் வந்தாலும் என்ன பாபா சாப்பிட்டீங்களா? என்று கேட்பார்கள். சாப்பிட்டேன் என்றால் சரி என சென்றுவிடுவார்கள். இல்லையென்றால் அவர்கள் சாப்பாடு வாங்கி கொடுத்து அனுப்பி விடுவார்கள். வட இந்தியாவில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது பரவலாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+